இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை

7/4/2025 1:56:31 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே ம.கொளக்குடி எல்இபி தெருவை சேர்ந்தவர்  பாலமுருகன்(27). இவரது மனைவி பிரியங்கா(22). இவர்களது குழந்தை மீனலோஷினி (1). இந்நிலையில் நேற்று மதியம் பிரியங்காவும் குழந்தையும் வீட்டில் தூக்கில் தொங்குவதாக காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தை, தாயையும் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாயும், குழந்தையும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்தனர். வரும் 6ம் தேதி மீனலோஷினிக்கு 1வது பிறந்தநாள் என்பதால் குழந்தைக்கு நகைகள் போடுவது தொடர்பாக கணவன், மனைவிக்குள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு விரக்தியில் குழந்தையை கொன்று விட்டு பிரியங்கா தானும் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணமா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (27). இவரது மனைவி நித்யா (24). இவர்களது மகன் தர்ஷன் (1). மகுடீஸ்வரன் குடும்பத்துடன் திருப்பூர் ஜெய் நகர் 2வது வீதியில் தங்கி அங்குள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகுடீஸ்வரன் நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றார். வீட்டில் நித்யாவும், தர்ஷனும் இருந்தனர். மகுடீஸ்வரன் பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது.மகுடீஸ்வரன் பலமுறை தட்டியும் நித்யா கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நித்யா தூக்கில் தொங்கிய நிலையிலும், தர்ஷன் கட்டிலிலும் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், `கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், நித்யா தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும், குழந்தையின் உடலில் எந்த காயமும் இல்லை. ஆனால். குழந்தை இறந்த நிலையில் கட்டிலில் கிடந்தது. எனவே குழந்தையை கொைல செய்துவிட்டு நித்யாவும் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது என்றனர்.

மேலும் சில
  • 74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்



  • சென்னை கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர்



  • அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம்; 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர்...தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் திடீர் பரபரப்பு



  • அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்?..அமைச்சர்கள் கடும் அதிருப்தி: உட்கட்சி சண்டையால் தொண்டர்கள் விரக்தி



  • தாயுள்ளம் கொண்ட தலைவர் கலைஞர் சட்டமாக்கிய சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தடையின்றி உடனே நடைமுறைப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு



  • தங்கம் விலை 4வது நாளாக சரிவு; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது..கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது காரணமா?



  • கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள அதிமுக அரசை மக்கள் நம்பியிருக்காமல் சுய பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள்; மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்



  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]