இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

6/27/2020 2:26:31 PM
உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நீடித்த கோடை வெயில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையே கேரளாவில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கியது. அரபிக்கடல் பகுதியில் கடந்த மாதம் உருவான நிசர்கா புயல் காரணமாக தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியது. படிப்படியாக இந்த பருவமழை வட மாநிலங்களிலும் தீவிரம் அடையத் தொடங்கியது. தற்போது தென் மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கிவிட்டது. இதையடுத்து, கேரளாவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகா, மும்பை, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தமிழகத்தில் காரையூரில் 130 மிமீ, கொடுமுடி, எருமைப்பட்டி, சங்கராபுரம் 110 மிமீ, புள்ளம்பாடி, பஞ்சப்பட்டி, தல்லாகுளம் 100 மிமீ மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவக் காற்று மற்றும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இது தவிர, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும். இதையடுத்து, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்களுக்கு அடுத்த நாட்களிலும் லேசான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். சென்னையை பொருத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் சில
  • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு



  • ‘புரெவி’யால் விடிய விடிய கொட்டிய மழை: மிதக்கிறது சென்னை



  • 90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை



  • ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு



  • முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி மனு: டிச.7ம் தேதி சசிகலா விடுதலை?



  • விவசாயிகளுக்கு ஆதரவாக டிச. 5ம் தேதி திமுக போராட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு



  • சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 10 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்



  • ரயில், பஸ் மீது கல்வீசி தாக்குதல் அன்புமணி மீது நடவடிக்கை?: சென்னை ஐகோர்ட்டில் திடீர் முறையீடு



  • பாம்பனுக்கு 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு இலங்கையில் கரை கடக்கும்: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]