இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பீகார், உத்தரபிரதேசத்தில் இடியுடன் மழை மின்னல் தாக்கி 110 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்

6/26/2020 3:33:01 PM
உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

பாட்னா: பீகார், உத்தரபிரதேசத்தில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்ததில் மின்னல் தாக்கி 110 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இடியுடன்  கூடிய மழை மற்றும் மின்னல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கிட்டதிட்ட 110 பேர்  உயிரிழந்துள்ளனர். குறைந்தது 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாட்னாவில் பேரிடர்  மேலாண்மைத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, புதன்கிழமை  முதல் மின்னல் தாக்கி 83 பேர் உயிர் இழந்தனர். இந்த சம்பவங்களில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரிய அளவில் சொத்துக்கள்  சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் பயங்கர இடி,  மின்னல் தாக்கியதில் பலி அதிகமாகியுள்ளது. கோபால்கஞ்சில் மட்டும்  அதிகபட்சமாக 13 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். நவாதா  மற்றும் மதுபானியில் தலா 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூரில் தலா 6  பேரும், கிழக்கு சம்பரான், தார்பங்கா, பங்க்காவில் தலா 5 பேரும், ககாரியா மற்றும் அவுரங்காபாத்தில் தலா 3 பேரும், மேற்கு சம்பரான், கிஷன்கஞ்ச்,  ஜெஹனாபாத், ஜாமுய், பூர்னியா, சபவுல், புக்சார், கைமுர் ஆகிய இடங்களில் தலா  2 பேரும் சமஸ்திபுர், ஷியோஹர், சரண், சித்மார்ஹி, மாதேபுராவில் தலா 1  நபரும் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து இரங்கல் தெரிவித்த முதல்வர் நிதிஷ் குமார் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இதற்கிடையே இந்திய  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில் 38 மாவட்டங்களில்  அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழை முதல் மிக கனத்த மழை  பெய்யும் என்று கூறியுள்ளது. பீகாரின்  அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில், நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் 24 பேர்  இறந்தனர். 12 பேர் காயமடைந்தனர். ஏற்கனவே புதன்கிழமை இம்மாநிலத்தில் மின்னல் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். மொத்தமாக இருமாநிலங்களிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு 110 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தோர்  குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில
  • உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி



  • வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு



  • டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை



  • ஜெகன் - சந்திரபாபு இடையே கடும் வாக்குவாதம்: 15 தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பு



  • நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஜன. 27ம் தேதிக்குள் ‘சிசிடிவி’ கேமரா பொருத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



  • எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்



  • தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில பேரவை தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு: சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரை



  • ‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்?... அசாமில் வருகிறது புது சட்டம்



  • டெல்லியில் 6ம் நாளாக போராட்டம்; விவசாயிகளுடன் மாலையில் பேச்சுவார்த்தை: 32 குழுக்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு



  • டெல்லியின் 5 நுழைவு வாயில்களிலும் போராட்டம்; ஜே.பி.நட்டா வீட்டில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை: பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலையில் சிக்கல் நீடிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]