இந்தியாவில் கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் 24 மணி நேரத்தில் 15,968 பேர் பாதிப்பு: உலக பட்டியலில் 21வது இடத்தில் சீனா
6/24/2020 2:21:14 PM
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 15,968 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. உலக பட்டியலில் முதலிடத்தில் இருந்த சீனா தற்போது 21வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 15,968 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பலி எண்ணிக்கை ஒரே நாளில் 465 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,56,122 ஆகவும், பலி எண்ணிக்கை 14,483 ஆகவும் உள்ளது. ஒரே நாளில் 10,437 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,574 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,83,003 பேராக உள்ளது.மகாராஷ்டிராவில் 3,214 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,39,010 ஆகி உள்ளது. 248 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,531 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1,925 பேர் குணமடைந்து மொத்தம் 69,631 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். டில்லியில் நேற்று 3,947 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 66,602 ஆகி உள்ளது. இதில் 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,301 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2,711 பேர் குணமடைந்து மொத்தம் 39,313 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் 2,516 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,603 ஆகி உள்ளது. நேற்று 39 பேர் உயிர் இழந்து மொத்தம் 833 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1,227 பேர் குணமடைந்து மொத்தம் 35,339 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குஜராத் மாநிலத்தில் 549 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,429 ஆகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 571 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,893 ஆக உள்ளது.
உலகளவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 93,59,278 ஆகவும், பலி எண்ணிக்கை 4,79,879 ஆகவும் உள்ளது. பாதிப்பு பட்டியலில் கடந்த பிப்ரவரி மாதம் வரை முதலிடத்தில் இருந்த சீனா, இன்று 21வது இடத்தில் பாதிப்பு 83,430 ஆக உள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து என, 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.