இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

இந்திய - சீன எல்லை பதற்றத்தை பயன்படுத்தி டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: உச்சக்கட்ட பாதுகாப்பு

6/22/2020 3:07:03 PM
அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மக்களை மிரட்டிய வெள்ளம்: 5 ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பீதி

புதுடெல்லி: டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லி போலீசார் உச்சபட்ச உஷார் நிலையில் உள்ளன. இந்திய - சீனா ராணுவப் படைகளுக்கு இடையே எல்லையில் ஏற்பட்ட மோதலால் உண்டான  பதற்றத்தைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தலைநகர் டெல்லியில் தாக்குதலைத்  நடத்தி திசை திருப்ப தி்ட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடந்த ஒரு மாதத்தில் ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அதனால், தீவிரவாதிகளிடம் இருந்தும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால், டெல்லியில் தாக்குதல் நடத்தும் நோக்கில் 4 முதல் 5 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறையினர் டெல்லி போலீசின் குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் டெல்லியில் உள்ள 15 மாவட்ட போலீசாரும் நேற்றிரவு முதல்  பாதுகாப்பையும், வாகனங்கள் தணிக்கையையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக டெல்லியின் எல்லைகள் சிறப்பு அதிரடிப்படைகள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பேருந்து, டாக்சி மற்றும் கார் மூலம் சாலை வழியாகவே தீவிரவாதிகள் நுழைவதற்கு வாய்ப்புள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளதால் எல்லைப்பகுதிகளில் உச்ச பட்ச கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான காய்கறி மார்க்கெட் பகுதி, மருத்துவமனைகள், பேருந்து நிலையம் ஆகியவற்றில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருவதால், நோயாளிகள் வேடத்தில் தீவிரவாதிகள் சென்றுவிடக்கூடாது எனும் நோக்கில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், டெல்லி மாநகருக்கு வரும் காஷ்மீர் பதிவு எண் கொண்ட வாகனங்கள், கார்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்தபின்பே அனுமதிக்கின்றனர். டெல்லியில் உள்ள தங்கும்விடுதிகள், ரெஸ்டாரண்ட்கள், விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றில் நேற்று இரவிலிருந்து போலீசார் கண்காணித்தும், சோதனை செய்தும் வருகின்றனர். குறிப்பாத டெல்லியின் வடக்கு மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்த எச்சரிக்கை இருப்பதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியை போன்று நாட்டின் பிற நகரங்களுக்கும் தீவிரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில
  • வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசிய 4 பேர் குழுவிடம் விவசாயிகளுக்கு நீதி கிடைக்காது: காங். செய்தி தொடர்பாளர் காட்டம்



  • புனேவில் இருந்து முதல் கட்டமாக 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தது: இன்று மாலை மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு



  • பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; ‘அல்வா’ நிகழ்ச்சி, பிரிண்ட் ஆவணம் கிடையாது: மத்திய நிதியமைச்சக வட்டாரம் தகவல்



  • டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 15ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு



  • 15ம் தேதி 9ம் கட்ட பேச்சுவார்த்தை வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு



  • கூட்டணி தர்மத்தை மீறலாமா? சிவசேனா நிர்வாகியை வளைக்கும் சரத்பவார் : டுவிட்டை போட்டுவிட்டு நீக்கியதால் பரபரப்பு



  • விவசாயிகள் டிராக்டர் பேரணியால் திணறியது டெல்லி



  • ரூ. 971 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றம் கட்ட அனுமதி: சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகளில் ஒருவர் மாறுபட்ட தீர்ப்பு



  • கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கேரளா உட்பட 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல்... தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் கண்காணிப்பு



  • டாக்டர் கணவனிடமிருந்து பிரிந்ததால் பெண் மருத்துவர் மகனுடன் தற்கொலை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]