இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

18 எம்பிக்களை தேர்ந்தெடுக்க 1,000 எம்எல்ஏக்கள் வாக்களிக்கின்றனர் நாளை மறுநாள் மாநிலங்களவை தேர்தல்: கொரோனா பாதித்த எம்எல்ஏக்களுக்கு தனி வாக்குச்சாவடி

6/17/2020 2:40:38 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: மாநிலங்களவைக்கு 18 எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை மறுநாள் நடக்கவுள்ளது. இதில் 1,000 எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். கொரோனா பாதித்த எம்எல்ஏக்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களவையில் ஏற்பட்டுள்ள எம்பிக்கள் காலியிடங்களை நிரப்புவதற்கானத் தேர்தலை கடந்த மார்ச் 26ம் தேதி நடத்த  தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. மொத்தம் 55 உறுப்பினர் இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதில் 37 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 18 உறுப்பினர் இடங்களுக்கு மார்ச் 26ம் தேதி தேர்தல் நடத்த இருந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவல் அபாயம் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திரம் (4), குஜராத் (4), ஜார்க்கண்ட் (2), மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா மூன்று, மணிப்பூர், மேகாலயாவில் தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நாளை மறுநாள் (ஜூன் 19) தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மாலையே தொடங்கும். அதன்பின் முடிவுகள் அறிவிக்கப்படும். கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு இடையே முதன்முறையாக நடத்தப்படும் தேர்தல் என்பதால், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் முறையில் சில மாற்றங்களை செய்து, அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களில் சிறப்பு தேர்தல் அதிகாரிகளை நியமித்துள்ளது. 

நாளை மறுநாள் நடக்கும் வாக்குப்பதிவில் ஆந்திரா, குஜராத், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய எட்டு மாநிலங்களை சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். அதனால், தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் மற்றும் தனி வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்தின் சுகாதாரத் துறையும் தேர்தல் அதிகாரிகளுடன் இதற்கான பணிகளை மேற்ெகாண்டு வருகின்றன. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் வாக்களிக்க தகுதியுள்ள ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளார். அனைத்து எம்எல்ஏக்களும் வாக்களித்த பின்னர் அவர் கடைசியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். பாதிக்கப்பட்ட எம்எல்ஏவை அழைத்து வர, தனி வாகனம் அனுப்பப்படும். அவருக்காக தனி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. 

குஜராத்தில் 4 எம்எல்ஏக்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாஜக-வைச் சேர்ந்தவர்கள் 3 பேர். ஒருவர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் கொரோனா பாதித்த எம்எல்ஏக்கள் இல்லை என்றாலும், கொரோனா அறிகுறி உள்ள எம்எல்ஏக்களுக்கு சுகாதாரத் துறை அனுமதியின் பேரில், அவர்கள் வாக்களிக்க உள்ளனர். முகக்கவசம், கைகழுவுதல் போன்ற சுகாதார நடவடிக்கைக்கு பின்னரே எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்களிப்பது ெதாடர்பான சுகாதார விதிமுறைகள் அடங்கிய புத்தகமும் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சில
  • நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு



  • கோடி கணக்கில் வெளிநாட்டு பணம் பதுக்கிய சொப்னா



  • நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு



  • மூணாறு நிலச்சரிவில் சிக்கிய அனைவரின் குடும்பத்துக்கும் வீடு; முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு



  • திருவல்லிக்கேணி, குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதி உட்பட 56 எம்எல்ஏ, 1 எம்பி தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு?....4 மாநிலங்கள் தேர்தல் கமிஷனுக்கு கடிதம்



  • 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்; கொரோனா கட்டுப்பாடுகளுடன் உச்சகட்ட பாதுகாப்பு



  • மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டே சட்டம் நடைமுறைக்கு வருமா?: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை



  • ‘என் தந்தை உயிருடன் உள்ளார்; வதந்தியை நம்பாதீர்’: பிரணாப் மகன் அபிஜித் தகவல்



  • டெல்லியில் பலத்த மழைக்கு மத்தியில் 74வது சுதந்திர தின ஒத்திகை: நாளை மறுநாள் விழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு



  • கொரோனா தடுப்பூசி நேரடியாக வாங்க மாநிலங்களுக்கு தடை: மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்க முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]