இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வேளாண் சந்தை செயலாளரை செருப்பால் அடித்த விவகாரம்: தூக்கு மேடை ஏற தயாராக இருக்கிறேன்...போலீஸ் விசாரணைக்கு பின் சோனாலி கண்ணீர்

6/14/2020 2:58:18 PM
74வது சுதந்திர தினவிழா; அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார் நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு

சண்டிகர்; வேளாண் சந்தை செயலாளரை செருப்பால் அடித்த விவகாரம் தொடர்பாக டிக்டாக் பிரபலமும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான சோனாலி போகட் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர், தூக்கு மேடை ஏற தயாராக இருக்கிறேன் என்று, கண்ணீருடன் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டார். டிக்டாக் பிரபலமும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான சோனாலி போகட் கடந்தாண்டு அரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் விவசாயச் சந்தைக்கு சென்று விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக, வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் செயலாளர் சுல்தான் சிங்கை சந்தித்தார். அங்கு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் திடீரென அவரை தனது செருப்பால் அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. சோனாலி போகட் செயலை பலரும் கண்டித்தனர்.
இந்நிலையில் சதர் காவல் நிலைய போலீசார், சோனாலி போகட் மீது வழக்குபதிவு செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக சோனாலியை காவல் நிலையம் வரவழைத்து இரண்டரை மணி நேரம் போலீசார் விசாரித்தனர்.

அவர், தான் செய்த செயலை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தனது பேஸ் புக் பதிவில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஐந்து நிமிட வீடியோவில், சோனாலி உணர்ச்சிவசப்பட்டு அழுதார். பாதிப்புக்கு ஆளான சுல்தான் சிங்கிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பெண்கள் காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த பின்னர், சோனாலி பேஸ் புக் வீடியோ பதிவில், ‘விவசாயிகளின் குரலாக அந்த நிர்வாகியிடம் பேசும்போது, அவர் என்னிடம் தகாத வார்த்தை பேசினார். ஒரு பெண்ணை அவமதிக்கும் போது என்ன செய்ய வேண்டுமோ, அதைத் தான் செய்தேன். நான் தவறு செய்திருந்தால் சட்டம் என்னை தண்டிக்கட்டும். அந்த தண்டனையை ஏற்கிறேன். இதற்காக நான் தூக்கிலிடப்பட்டாலும், தூக்கு மேடை ஏற தயாராக இருக்கிறேன். என் கணவர் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். இன்று நான் குரல் எழுப்பவில்லை என்றால், என் மகளுக்கும் எனக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டிருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில
  • நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் கொண்டாட்டம்; பெண்களின் திருமண வயது மறுபரிசீலனை..தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி பேச்சு



  • கோடி கணக்கில் வெளிநாட்டு பணம் பதுக்கிய சொப்னா



  • நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு



  • மூணாறு நிலச்சரிவில் சிக்கிய அனைவரின் குடும்பத்துக்கும் வீடு; முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு



  • திருவல்லிக்கேணி, குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதி உட்பட 56 எம்எல்ஏ, 1 எம்பி தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு?....4 மாநிலங்கள் தேர்தல் கமிஷனுக்கு கடிதம்



  • 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்; கொரோனா கட்டுப்பாடுகளுடன் உச்சகட்ட பாதுகாப்பு



  • மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டே சட்டம் நடைமுறைக்கு வருமா?: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை



  • ‘என் தந்தை உயிருடன் உள்ளார்; வதந்தியை நம்பாதீர்’: பிரணாப் மகன் அபிஜித் தகவல்



  • டெல்லியில் பலத்த மழைக்கு மத்தியில் 74வது சுதந்திர தின ஒத்திகை: நாளை மறுநாள் விழாவுக்கு கூடுதல் பாதுகாப்பு



  • கொரோனா தடுப்பூசி நேரடியாக வாங்க மாநிலங்களுக்கு தடை: மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்க முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]