இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கொரோனா வைரஸ் பரவல் விவகாரம் சீன அதிபர் ஜின்பிங் மீது பீகார் கோர்ட்டில் வழக்கு: சாட்சியாக மோடியும், டிரம்பும் சேர்ப்பு

6/11/2025 2:53:41 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

பாட்னா: கெரோனா வைரஸ் பரவல் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் சாட்சியாக பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ெகாரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் 2.87 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இந்த கொடூர வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என்று உலகின் பெரும்பாலான நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. உலகளவில் கிட்டத்தட்ட 74.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 1.15 லட்சம் பேர் இறந்தும் உள்ளனர். பல நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

இதற்கிடையில், பீகார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் பெட்டியா நகரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை வழக்கறிஞர் முராத் அலி என்பவர் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை ஏற்றுக்கொண்டு குற்றவியல் நடுவர் மன்றம், வருகிற 16ம் தேதி விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இவ்வழக்கை தொடுத்த வழக்கறிஞர் முராத் அலி கூறுகையில், ‘சீன அதிபர் ஜி ஜின்பிங், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் உள்ளிட்டோர் கொரோனா வைரசை உலகம் முழுவதும் பரப்ப சதி செய்துள்ளனர். இவ்வழக்கில் இந்திய நாட்டின் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரை சாட்சியாக சேர்த்துள்ளேன். கொரோனா காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். 

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269, 270, 271, 302, 307, 500, 504 மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். ஆதாரங்களாக சமூக, அச்சு ஊடகங்கள் மற்றும் பல்வேறு மின்னணு ஊடகங்களில் வெளியான செய்திகள், உலக சுகாதார அமைப்பின் வெளியிட்ட அறிக்கை தொடர்பான விபரங்களை சமர்பித்துள்ளேன். வருகிற 16ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது’ என்றார். ெகாரோனா விவகாரத்தில் சீனா மீது உலக நாடுகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரி வரும்நிலையில், பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர், உலக சுகாதார இயக்குனர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்



  • கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்



  • ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி



  • கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்



  • ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை



  • இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு



  • அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை



  • கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை



  • 3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி



  • இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]