இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

79 நாட்களுக்கு பிறகு தரிசனம்; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி: மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

6/7/2025 3:02:16 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் உள்ளூர் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது; ஏழுமலையானை, பக்தர்கள் எவ்வித சிரமங்களும் இல்லாத வகையில் தரிசனம் செய்துவிட்டு செல்ல அதிகாரிகள், ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோயிலுக்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கோயிலில் தீர்த்தம், சடாரி, சிறிய லட்டுகள் வழங்குவது இருக்காது. அனைத்து பக்தர்களுக்கும் ஒரு இலவச லட்டு வழங்கப்படும். கூடுதல் லட்டுகள் தேவைப்படுவோர் கோயிலுக்கு வெளியே உள்ள கவுன்டரில் ரூ.50க்கு பெறலாம். அன்னபிரசாத கூடத்தில் இதுவரை ஒரேநேரத்தில் 1000 பேர் வரை அமர்ந்து உணவு அருந்திய நிலையில், நாளை முதல் 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

வழக்கமாக வழங்கப்பட்டு வந்த சாதம், சாம்பார், ரசம், ேமார், பொரியல் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக பிசிபெலாபாத் மற்றும் தயிர்சாதம் வழங்கப்படும். திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களையும் அலிபிரியில் உடல் வெப்ப நிலை கண்டறிந்து, சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்னரே மலைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படும். அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. இவ்வாறு கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோயில்களான கோவிந்தராஜ சுவாமி, சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, திருச்சானூர் பத்மாவதி தாயார், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி, கபிலதீர்த்தம் கபிலேஸ்வர சுவாமி ஆகிய கோயில்கள் நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசிக்கலாம். 1 மணி நேரத்தில் 250 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தீர்த்தம், சடாரி கிடையாது. ஆன்லைன் அல்லது 7738286666 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி அனுமதி பெறவேண்டும். திருப்பதி கோயிலில் சுமார் 79 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் நாளை முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் சில
  • குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை



  • 28 ஆண்டுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை: வலுவான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிப்பு



  • சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?



  • கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்று 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு?... சினிமா தியேட்டர், மண்டபங்கள் திறக்க வாய்ப்பு



  • உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்



  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]