வடசென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் பலி
6/7/2025 2:39:29 PM
தண்டையார்பேட்டை: கொரோனா தொற்று காரணமாக வடசென்னை பகுதியில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 60 வயது ஆண் கொரோனா தொற்று காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுபோல் ராயபுரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி நேற்று நள்ளிரவு இறந்தார். இதுபோல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் நேற்று நள்ளிரவு இறந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். நேற்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.