இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் பள்ளிகளை இப்போது திறக்க இயலாது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

6/6/2025 3:18:51 PM
பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு; பாஜக கூட்டணிதான் எங்கள் பிரதான எதிரி: மாஜி அமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி சீன ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் நவீன ஏவுகணைகள் குவிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான் கைகோர்ப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்த இயலாது. ஆன்லைன் மூலமாகத்தான் கல்வியை கற்றுத்தர முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்த இயலாது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலமாகத்தான் மாணவர்களுக்கு கல்வியை கற்றுத்தர முடியும். இந்த சூழ்நியைில் இதைத்தவிர வேறு வழியில்லை. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்றால், கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், கட்டாத மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது என்று எங்காவது சம்பவம் இருக்குமானால், அரசின் கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபற்றி முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் எல்லா பள்ளிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். அதுபோன்று ஏதாவது தவறுகள் இருக்குமானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அரசை பொறுத்தவரையிலும், எந்தெந்த இடங்களில் கொரோனா வைரஸ் கூடுதலாக இருக்கிறது என்று மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக கண்காணித்து, அங்கு இருக்கின்ற 10ம் வகுப்பு மாணவர்களை வேன் மூலமாக அழைத்து வந்து தனி அறையில், அவர்கள் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு முடிந்ததும், மீண்டும் வேன் மூலம் அந்த மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்லும் பணிகளை அரசு செய்யும். வருகிற 8 மற்றும் 9ம் தேதி ஹால் டிக்கெட் வழங்கும்போது தேர்வு எழுதும் மாணவ - மாணவிகளுக்கு இரண்டு மாஸ்க் வழங்கப்படும். மாணவர்கள் வருவதற்கு முன்னால், தேர்வு எழுதும் மையங்களில் கிருமி நாசினி தெளிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்து கல்வி அதிகாரிகள், கல்வியாளர்கள் கொண்ட 18 பேர் குழுக்கள் ஆய்வு செய்து வருகிறது. ஆன்லைன் மூலமாக, எப்படி மாணவர்களுக்கு 2 மாத இடைவெளியை சரி செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இறுதியாக முடிவு ஏற்பட்ட பிறகு முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • போலீசார் தாக்கியதில் 2 வியாபாரி சாவு: மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை



  • கொரோனா பாதிப்பு வேகம் அதிகரிப்பதால் தமிழகத்தில் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிப்பு?... மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு நாளை மாலை முதல்வர் அறிவிக்க திட்டம்



  • சாத்தான்குளத்தை அடுத்து தென்காசியிலும் கொடூரம்; போலீஸ் தாக்குதலில் ஆட்டோ டிரைவர் சாவு: பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்



  • தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு



  • சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு வெளியே வந்தால் அதிரடி கைது



  • 2 வியாபாரிகள் மட்டுமல்ல... சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் 10 நாட்களுக்கு முன்பும் ஒருவர் மரணம்: வைரலாகும் ஆடியோ: திடுக் தகவல்கள் அம்பலம்



  • செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை



  • கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை



  • சாத்தான்குளத்தில் 2 பேர் உயிரிழப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு: 30ம் தேதி காவல்நிலையங்களில் மனு அளிக்கும் போராட்டம்



  • போலீசார் தாக்கியதில் 2 வியாபாரிகள் சாவு சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு: பரபரப்பு தகவல்கள்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]