இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

வங்கி மோசடி செய்து இங்கிலாந்தில் தங்கியிருக்கும் மல்லையா இன்னும் இந்தியா வரவில்லை: விரைவில் விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைப்பு

6/4/2025 2:42:28 PM
அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து மாமல்லபுரத்தில் அரசு கல்லூரி துவங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

மும்பை: பல கோடி ரூபாய் வங்கி மோசடி செய்து இங்கிலாந்தில் தங்கியிருக்கும் மல்லையா, இன்னும் இந்தியா அழைத்துவரப்படவில்லை. ஆனால், விரைவில் இந்திய புலனாய்வு விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. ‘கிங் பிஷர்’ விமானத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் மல்லையா, 17க்கும் மேற்பட்ட வங்கிகளில் கிட்டத்தட்ட 9000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பி தராமல் இவர் கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றார். இதனையடுத்து மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை வைத்தது.

ஆனால், இதனை எதிர்த்து விஜய் மல்லையா தரப்பில் இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப். 20ம் தேதி அவரது கோரிக்கையை நிராகரித்தது. இதனையடுத்து அவர் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டையும் உச்ச நீதிமன்றம் மே 14ம் தேதி நிராகரித்த நிலையில் விஜய் மல்லையா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஏற்கனவே, மல்லையாவுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்கு அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜராக மும்பைக்கு அழைத்து வரப்படுவார் என்றும்,

மும்பை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் நேற்றிரவு தகவல் வெளியானது. ஆனால், விஜய் மல்லையா இந்தியாவுக்கு இன்னும் அழைத்து வரப்படவில்லை என்றும், அவர் எந்த நேரத்திலும் இங்கிலாந்து அரசால் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் சார்பில் மல்லையா மீது வழக்குகள் தொடரப்பட்டன. மல்லையாவை மீண்டும் இந்தியா அழைத்து வர லண்டனுக்கு எந்த குழுவும் செல்லவில்லை.

இங்கிலாந்தில் அவருக்காகன சட்டரீதியான தீர்வுகள் எதுவும் இல்லாததால், அவரே சொந்தமாக இந்தியா திரும்ப வாய்ப்புள்ளது. மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறைச்சாலை குறித்து இங்கிலாந்து நீதிமன்றம் விரிவான அறிக்கையை கோரியது. அதன் அடிப்படையில் சிறைச்சாலை வீடியோவுடன் சிபிஐ விவரங்களை இங்கிலாந்து நீதிமன்றத்திற்கு அனுப்பியிருந்தது’ என்று கூறினர்.

மேலும் சில
  • பல ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி; தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானவராக அறிவிப்பு: லண்டன் நீதிமன்றம் அதிரடி



  • இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தம்பதியர் படையெடுப்பால் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறியது உக்ரைன்



  • 44 நாடுகளில் பரவியது `பி1.617’ வகை உருமாறிய வைரஸ்; இந்தியாவில் கொரோனாவால் 7.5 லட்சம் பேர் பலி?.. இறப்பை குறைத்து காட்டுவதாக வாஷிங்டன் பல்கலை ‘ரிப்போர்ட்’



  • கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே உயிரி ஆயுதங்களுடன் 3ம் உலகப்போருக்கு தயாரான சீனா: அமெரிக்க புலனாய்வு துறை அறிக்கையில் பகீர்



  • கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கி தவித்த போது இந்தியா உதவியது போல் நாங்களும் உதவுவோம்!...அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்



  • சீன பெண் இயக்குநர் இயக்கிய ‘நோமேட்லேண்ட்’ படத்துக்கு 3 ஆஸ்கர் விருது: சிறந்த நடிகையாக பிரான்சஸ் மெட்டோர்மெண்ட் தேர்வு



  • சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு



  • இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை..! அதிகாரிகள் அட்வான்ஸ் குழு நாளை காலை தமிழகம் வருகிறது



  • ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து 9 நாடுகளில் ஆஸ்டிரா தடுப்பூசிக்கு தடை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்



  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]