இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஹைட்ராக்சி குளோரோகுயின் ‘ஓகே’: உலக சுகாதார அமைப்பு தகவல்

6/4/2025 2:40:19 PM
அர்ஜென்டினாவை வீழ்த்தியது ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்தியா: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து மாமல்லபுரத்தில் அரசு கல்லூரி துவங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

ஜெனீவா: கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் சப்ளை செய்யப்பட்டன. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை தான் பயன்படுத்தி வருவதாக தெரிவித்திருந்தார். ஆனால், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் மூலம் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட நோயாளிகள், அந்த மருந்துகளைப் பயன்படுத்தாதவர்களை விட அதிக அளவில் உயிரிழப்பதாக சில ஆய்வுகள் தெரிவித்திருந்தன.

அதனால், உலக சுகாதார அமைப்பு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மூலமான சிகிச்சையை நிறுத்தி வைத்திருக்குமாறு கடந்த மாதம் 26ம் தேதி எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா வைரஸ் பாதித்த ேநாயாளிகளுக்கு அளிக்கலாம் என்று, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியோசஸ் கூறுகையில், ‘கொரோனா இறப்பு தொடர்பான ஆய்வின்  அடிப்படையில், உலக சுகாதார அமைப்பின் தொற்று பாதுகாப்பு கண்காணிப்பு குழு, மீண்டும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்த மருந்தை 35 நாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்டவர்களுக்கு அளித்து சோதனை செய்யப்பட்டது’ என்றார்.

மேலும் சில
  • பல ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி; தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானவராக அறிவிப்பு: லண்டன் நீதிமன்றம் அதிரடி



  • இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தம்பதியர் படையெடுப்பால் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறியது உக்ரைன்



  • 44 நாடுகளில் பரவியது `பி1.617’ வகை உருமாறிய வைரஸ்; இந்தியாவில் கொரோனாவால் 7.5 லட்சம் பேர் பலி?.. இறப்பை குறைத்து காட்டுவதாக வாஷிங்டன் பல்கலை ‘ரிப்போர்ட்’



  • கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே உயிரி ஆயுதங்களுடன் 3ம் உலகப்போருக்கு தயாரான சீனா: அமெரிக்க புலனாய்வு துறை அறிக்கையில் பகீர்



  • கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கி தவித்த போது இந்தியா உதவியது போல் நாங்களும் உதவுவோம்!...அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்



  • சீன பெண் இயக்குநர் இயக்கிய ‘நோமேட்லேண்ட்’ படத்துக்கு 3 ஆஸ்கர் விருது: சிறந்த நடிகையாக பிரான்சஸ் மெட்டோர்மெண்ட் தேர்வு



  • சீன தயாரிப்பு தடுப்பூசி போட்ட நிலையில் இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு



  • இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை..! அதிகாரிகள் அட்வான்ஸ் குழு நாளை காலை தமிழகம் வருகிறது



  • ரத்த கட்டு சம்பவங்களை தொடர்ந்து 9 நாடுகளில் ஆஸ்டிரா தடுப்பூசிக்கு தடை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்



  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]