இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கொரோனா வைரஸ் உலகை உலுக்கி வரும் நிலையில் காங்கோவில் ‘எபோலா’ வைரஸ் தாக்கி 4 பேர் பலி: தொற்றை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

6/2/2025 3:39:40 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

காங்கோ: கொரோனா வைரஸ் உலகை உலுக்கும் நிலையில் காங்கோவில் ‘எபோலா’ வைரஸ் தாக்கி 4 பேர் பலியாகி உள்ளனர். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி இன்று மக்களை முடக்கி உள்ள நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் தொற்று ேவகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று கொரோனா வைரஸ் தொற்றை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பரவல் இருப்பதால், தொடர்ந்து சுகாதார அவசர நிலைகளை கண்காணித்து ஆலோசனைகளை வெளியிட்டுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, காங்கோ ஜனநாயக குடியரசு அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘ஈக்வெட்டூர் மாகாணத்தில் உள்ள வங்காட்டா சுகாதார மண்டலத்தில் எபோலா வைரஸ்  நோய் தொற்று பரவி வருகிறது. வங்காட்டாவில் இதுவரை ஆறு ேபர் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் இறந்துவிட்டனர். மற்ற இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட ஆறு பேரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவர்களுக்கு எபோலா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஆப்பிரிக்காவின் உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் டாக்டர் மாட்ஷிடிசோ மொயெட்டி கூறுகையில், ‘கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள சவாலான நிலையில், எபோலா பரவல் நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த தேசிய சுகாதார திறனை வலுப்படுத்தி வருகிறோம். ஆப்பிரிக்கா சிடிசி மற்றும் பிற கூட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறோம். உள்ளூர் நிலைமையை கண்டறிய உலக சுகாதார அமைப்பு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய தொற்று பரவல் அண்டை நாடுகளுக்கு பரவாமல் இருக்க நாங்கள் விரைவாக செயல்பட்டு வருகிறோம். ஆப்பிரிக்க நாட்டின் ஒரு விலங்கு நீர்த்தேக்கத்தில் வைரஸ் உருவாகி இருக்கலாம். காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலாவின் புதிய வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது’ என்றார். கடந்த 1976ம் ஆண்டில் எபோலா வைரஸ் தொற்று முதன்முறையாக காங்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், இதுவரை காங்கோவில் 11வது முறையாக எபோலா வைரஸ் பரவல் தொடங்கி உள்ளதாக சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்



  • கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்



  • ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி



  • கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்



  • ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை



  • இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு



  • அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை



  • கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை



  • 3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி



  • இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]