இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சட்டீஸ்கர் - ஒடிசா மாநில எல்லையில் ஆயுத தொழிற்சாலை அழிப்பு: 2 மாவோயிஸ்ட் அதிரடி கைது

6/1/2025 4:02:04 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்?

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் - ஒடிசா மாநில எல்லையில் செயல்பட்டு வந்த ஆயுத தொழிற்சாலை அழிக்கப்பட்டது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக 2 மாவோயிஸ்ட் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டம் மற்றும் ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்ட எல்லையில், மாவோயிஸ்ட் அமைப்பினர் ஆயுதத் தொழிற்சாலை நடத்தி வருவதாக நக்சல் தடுப்பு பிரிவுக்கு உளவு தகவல்கள் கிடைத்தன. சுக்மாவின் கதிராஸ் காவல் நிலையப் பகுதியில் மாவோயிஸ்ட் ஆதாரவாளர் மத்வி ஜோகா (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நேற்று நக்சல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை போலீசார் ஆயுத தொழிற்சாலை பகுதியை சுற்றி வளைத்து ஆலையை அழித்தனர். இதுகுறித்து சுக்மா காவல் கண்காணிப்பாளர் ஷலப் சின்ஹா ​கூறுகையில், ‘ராசவயா கிராமத்திற்கு அருகே மாவோயிஸ்ட் அமைப்பினர் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீஸ் குழு ஒன்று மத்வி ஜோகா என்பவரை கைது செய்தது. ஜோகாவிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 7-8 ஆண்டுகளாக சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.

சுக்மாவில் மாவோயிஸ்டுகளுக்கு துப்பாக்கி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆலை ஒன்று செயல்படுவதாகவும், அங்கு அவர் பணியாற்றியதாகவும் தெரிவித்தார். ​​மாவோயிஸ்டுகளுக்கான துப்பாக்கிகளை தயாரிப்பு பஸ்ரிகுடா கிராமத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர், மல்கன்கிரி போலீசாருடன் ஒருங்கிணைந்து அங்கு சோதனை நடத்தப்பட்டு, அங்கு பதுங்கியிருந்த பர்னாய் (45) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ஆயுதங்களை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளுடன் துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், தோட்டாக்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த ஆலையும் அழிக்கப்பட்டது, கடந்த ஒரு வருடத்தில் சுக்மாவில் மாவோயிஸ்டுகளுக்கு கைது செய்யப்பட்ட பர்னாய் மூலம் 35 துப்பாக்கிகளை தயாரித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது’ என்றார்.

மேலும் சில
  • மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜூன் 14ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: கொரோனா ஊரடங்குக்கு பின் நடக்கிறது



  • பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 68 நாட்களில் 94 உத்தரவுகள்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு



  • புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு



  • அமெரிக்க அதிபர் இந்தியாவில் 2 நாள் முகாம்; டிரம்பால் கொரோனா அதிகரிப்பு: சிவசேனா எம்பி ராவத் குற்றச்சாட்டு



  • பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு; கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா : முதல்வர் பினராயி விஜயன் தகவல்



  • தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராததால் பீகாரில் 25,000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மாநில கல்வித்துறை அதிரடி நடவடிக்கை



  • 189 நாடுகளை சேர்ந்த 100 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்; 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு



  • நாளை நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு: 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து



  • கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா: காசர்கோடு மாவட்டத்துக்கு ‘சீல்’



  • 186 நாடுகளை சூறையாடி வரும் கொடூர கொரோனா வைரஸ்: 4 நாளில் 1 லட்சம் பேர் பாதிப்பு; 4,883 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]