இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

வெள்ளை மாளிகையை சுற்றி வன்முறை போராட்டம்; பதுங்கு குழியில் அதிபர் டிரம்ப் தஞ்சம்: அமெரிக்காவில் 25 நகரங்களில் ஊரடங்கு அமல்

6/1/2025 3:47:42 PM
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்ய பிரதமருக்கு வலியுறுத்தல் மும்மொழி திட்டத்தை திணிக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக தமிழக அமைச்சரவையில் தீர்மானம்: முதல்வருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடிதம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை சுற்றி வன்முறை போராட்டம் நடைபெற்று வரும்நிலையில், மாளிகையின் பதுங்கு குழியில் அதிபர் டிரம்ப் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர 25 நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னபொலிஸ் என்ற இடத்தில் கருப்பின காவலாளியை சில போலீசார் கடுமையாகத் தாக்கினர். அதில், ஜார்ஜ் பிளாய்ட் என்ற இளைஞர் போலீசாரால் கழுத்தில் காலால் அழுத்தி கொல்லப்பட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், கருப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறை நீடிப்பதாகக் கூறி பல்வேறு இடங்களிலும் காவலரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்தன.

மின்னசொட்டா மாநிலத்தை தொடர்ந்து லாஸ் ஏஞ்சலீஸ், சிகாகோ, மியாமி உட்பட பல்வேறு நகரங்களிலும் 3வது நாளாக போராட்டம் வலுவடைந்து வருகிறது. போராட்டங்களின் போது பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனால் அட்லாண்டா, லாஸ் ஏஞ்சலீஸ், பிலடெல்பியா, டென்வர், சின்சினாட்டி, போர்ட்லேண்ட், லூயிஸ்வில், கெண்டக்கி, ஓரேகான் ஆகிய 25 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஊரடங்கை மீறி அப்பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே வெள்ளை மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தடுப்புகளைத் தாண்டி முன்னேறிய அவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் பாதுகாப்பு கருதி வெள்ளை மாளிகை முன் ராணுவ கவச வாகனங்கள், டேங்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஜார்ஜ் பிளாயிட்டின் மரணத்திற்கு நீதிகேட்டு அமெரிக்கா மட்டுமின்றி இங்கிலாந்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாகவும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து ஜார்ஜ் பிளாயிட் மரணத்திற்கு நீதிகேட்டும், கருப்பின மக்களும் வாழவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கியிருக்கும் வெள்ளை மாளிகையின் அருகே நிலைமை மோசமடைந்து வருவதால், பாதுகாப்பு பணியில் இருந்த ரகசிய சேவை ஏஜென்சி முகவர்கள், அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் உள்ள பாதுகாப்பு பதுங்கு குழிக்கு அழைத்துச் சென்றனர். அதனால், டிரம்ப் அங்கிருந்தே உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இருந்தும், வாஷிங்டன் போலீஸ் வெள்ளை மாளிகையைச் சுற்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை விரட்டியது. தொடர்ந்து கலவரம், வன்முறை, போராட்டம் போன்ற காரணங்களால் அமெரிக்காவில் பதற்றம் அதிகரித்து வருவதால், ராணுவம் தயார் நிலையில் இருக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • முதல் நாடாக ரஷ்யா அறிவிப்பு; கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி...அக்டோபரில் பொது மக்களுக்கு போட திட்டம்



  • கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பாக கிடைக்காது; உலக சுகாதார நிறுவன இயக்குனர் தகவல்



  • ‘மாஸ்க்’ அணிய உத்தரவிட முடியாது; அதிபர் டிரம்ப் தடாலடி



  • கொரோனாவில் இருந்து தப்பிக்க ரூ47 கோடியில் தனித்தீவு: ‘எஸ்கேப்’ ஆன ஐரோப்பிய பணக்காரர்



  • ராமர் ஒரு நேபாளி: நேபாள பிரதமர் சர்ச்சை



  • இரவெல்லாம் செல்போனில் ‘கேம்’ விளையாடியதால் ஆத்திரம்; 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்: 10 நாட்களுக்கு பின் அட்டை பெட்டியில் சடலம் மீட்பு



  • அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்கள் 68 வயதில் மரணம்: சக்கர நாற்காலியிலேயே முடிந்த சவாலான வாழ்க்கை



  • கொரோனாவுக்கு மத்தியில் புதிய அச்சுறுத்தல் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ நோய்: சகோதரர் இருவர் பலியால் 146 பேர் தனிமை



  • 3 மாதத்திற்கு பின் லண்டனில் மதுக் கடைகள் திறப்பு: குடிகாரர்களால் பெரிய தலைவலியா இருக்கு..!சமூக இடைவெளி பின்பற்ற கூறிய அதிகாரிக்கு அடி



  • இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: வாழ்த்து தெரிவித்த மோடிக்கு அதிபர் டிரம்ப் டுவிட் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]