இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நாளை நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு: 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து

3/21/2020 2:42:28 PM
அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு தனியார் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காததால் போராட்டம் விவசாயிகள் குண்டுக்கட்டாக கைது

புதுடெல்லி: நாளை நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்குப் பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் சுற்று அடிப்படையில் வீடுகளில் இருந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ‘மக்கள் பொது ஊரடங்கு’ பிறப்பிக்கப்படுவதாகவும், மக்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமரின் அழைப்பை ஏற்று, டெல்லி மெட்ரோ சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும். அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) இன்று முதல் திங்கள் வரை அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து டெல்லி சந்தைகளை முழுமையாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இருப்பினும், மருந்துகள், பால் மற்றும் மளிகைக் கடைகள் மூடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 23 முதல் ஏப்ரல் 3 வரை திட்டமிடப்பட்ட 2019 சிவில் சர்வீஸ் தேர்வுக்கான மீதமுள்ள நேர்காணல்களை மத்திய பொது சேவை ஆணையம் ஒத்திவைத்தது. நேர்முகத் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் நீரிழிவு நோய், சுவாச பிரச்னைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்கள் போன்ற நிபந்தனைகளைக் கொண்ட அதிகாரிகளுக்கு அடுத்த மாதம் 4ம் தேதி வரை மருத்துவ சான்றிதழின்றி பயண விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் பொது ஊரடங்கு உத்தரவால், 3,700 ரயில்கள், டெல்லி மெட்ரோ மற்றும் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்படும். டெல்லி உட்பட பல நகரங்களில் மால்கள், சினிமா அரங்குகள், ஹோட்டல்கள், உணவகங்களும் மூடப்படும். இந்திய ரயில்வே அறிவிப்பின்படி, நாளை நாடு முழுவதும் தினமும் 2,400 பயணிகள் ரயில்கள் மற்றும் 1,300 மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டு, அவர்களின் பணம் அனைத்தும் பயணிகளுக்கு திருப்பித் தரப்படும். இந்தியாவில் சர்வதேச விமானங்களை தரையிறக்குவது நிறுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இரண்டு உள்நாட்டு விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்களும் ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கோ ஏர் நிறுவனம் தனது உள்நாட்டு விமானங்கள் அனைத்தையும் நாளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இடிகோ 40% விமானங்களை மட்டுமே இயக்குவதாகக் கூறியுள்ளது. இரு நிறுவனங்களின் முடிவால் நாளை ஆயிரம் விமானங்களின் சேவை ரத்து செய்யப்படும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

மேலும் சில
  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



  • ஆக. 14ம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்; ரூ15 கோடிக்கு மேல் வரம்பின்றி செல்லும் குதிரை பேரம்: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]