இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தெலங்கானாவில் 13 ஆக உயர்வு: முதல்வர் அவசர ஆலோசனை

3/19/2020 3:51:09 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்?

திருமலை: கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை ஆந்திராவில் 2ஆகவும், தெலங்கானாவில் 13ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் தெலங்கானா முதல்வர் இன்று அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் நெல்லூரை சேர்ந்த வாலிபர், இத்தாலி சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன்பு நாடு திரும்பினார். அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது ெதரியவந்தது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த வாலிபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து பிரகாசம் மாவட்டத்திற்கு வந்த மேலும் ஒருவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 109 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 94 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 பேரின் ரத்த மாதிரி முடிவுகள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தெலங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 16ம் தேதி இந்தோனேஷியாவில் இருந்து வந்த 7 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஈட்ல ராஜேந்திரா கூறுகையில், தெலங்கானாவை சேர்ந்த ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இந்த வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதால் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் சில
  • சட்டீஸ்கர் - ஒடிசா மாநில எல்லையில் ஆயுத தொழிற்சாலை அழிப்பு: 2 மாவோயிஸ்ட் அதிரடி கைது



  • மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜூன் 14ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: கொரோனா ஊரடங்குக்கு பின் நடக்கிறது



  • பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 68 நாட்களில் 94 உத்தரவுகள்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு



  • புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு



  • அமெரிக்க அதிபர் இந்தியாவில் 2 நாள் முகாம்; டிரம்பால் கொரோனா அதிகரிப்பு: சிவசேனா எம்பி ராவத் குற்றச்சாட்டு



  • பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு; கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா : முதல்வர் பினராயி விஜயன் தகவல்



  • தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வராததால் பீகாரில் 25,000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மாநில கல்வித்துறை அதிரடி நடவடிக்கை



  • 189 நாடுகளை சேர்ந்த 100 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்; 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு



  • நாளை நாடு முழுவதும் ஒருநாள் ஊரடங்கு: 3,700 ரயில்கள், 1,000 விமானங்கள் ரத்து



  • கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா: காசர்கோடு மாவட்டத்துக்கு ‘சீல்’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]