இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கொரோனா வைரஸ் பாதிப்பு 301 ஆக உயர்வு; ‘கிட்’ பற்றாக்குறையால் பாகிஸ்தானில் ஸ்டிரைக்: ராணுவ மருத்துவர்களை அழைக்க கோரிக்கை

3/19/2020 3:39:20 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொேரானா வைரஸ் பாதிப்பு 301 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் ‘கிட்’ பற்றாக்குறையால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ மருத்துவர்களை பணிக்கு அழைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் பாகிஸ்தானில் 301 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரபடி முதன்முறையாக இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளன. பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் பெரும்பாலானோர் ஈரானுக்கு யாத்திரை சென்றவர்களுடன் தொடர்புடையவர்கள். ெகாரோனாவால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் ஒன்றான ஈரானில் தற்போது 17,360க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 638 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானின் இருந்து 960 கிலோ மீட்டர் தூரத்தில் ஈரான் உள்ளதால், எளிதில் மக்கள் சென்று வருகின்றனர். கடந்த மார்ச் 16 முதல் தப்தான் எல்லை மூடப்பட்டுள்ளது. ஆனால் ஈரானில் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ஷியா யாத்ரீகர்கள், இரண்டு வார கால தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கொரோனா வைரஸ் வழக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பதிவாகியுள்ளது. அங்கு சமீபத்தில் ஈரானில் இருந்து திரும்பி வந்த 45 வயது நபருக்கு கண்டறியப்பட்டது. பாகிஸ்தான் அதிகாரிகள் 1,015,900க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகளை திரையிட்டு சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். இதற்கிடையில், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பொதுத்துறை மருத்துவமனைகளில் ‘கிட்’ (சிகிச்சைக்கான மருத்துவ சிறப்பு உபகரணம்) பற்றாக்குறை மற்றும் மருத்துவர்களுக்கு பிற முன்னெச்சரிக்கை கருவிகளை வழங்காததை எதிர்த்து அம்மாகாணத்தில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, கிராண்ட் ஹெல்த் அலையன்ஸ் (ஜிஹெச்ஏ) தலைவர் சல்மான் ஹசீப் கூறுகையில், ‘‘நோய்வாய்ப்பட்ட மக்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் மட்டுமே மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். டாக்டர்கள் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடிகிறது. சுகாதார அதிகாரிகள் பஞ்சாப் மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு 1,200 கிட்களை மட்டுமே வழங்கினர்; அது போதாது. பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்களின் சேவையை அரசு அமர்த்த வேண்டும். கொரோனா தடுப்பு  கருவிகள் வழங்கப்படாவிட்டால் அவசர வார்டுகளில் சேவைகளையும் நாங்கள் நிறுத்துவோம்” என்றார்.

மேலும் சில
  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



  • கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது: ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை



  • ஹாங்காங் விவகாரத்தில் தலையீடு; 14 சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை: வெளியுறவுத்துறை செயலர் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]