போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது
3/19/2020 3:01:30 PM
துரைப்பாக்கம்: சென்னை அடுத்த முட்டுக்காடு மாதா கோயில் தெருவில் நேற்றிரவு ஒரு வாலிபர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கானத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே காவலர் கணேசன், சம்பவ இடத்திற்கு போலீஸ் வாகனத்தில் சென்றார். அங்கு தகராறில் ஈடுபட்ட வாலிபரை, போலீஸ் வாகனத்தில் ஏற்றும்போது தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த வாலிபர், கணேசனை தாக்கியுள்ளார்.
உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த வாலிபரை கைது செய்து அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த வாலிபர் கேளம்பாக்கம் கே.எஸ்.எஸ் நகரை சேர்ந்த ரிச்சர்டு (20) என்றும், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருவதாகும் முட்டுக்காட்டில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.