இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

போலி டாக்டர்கள் மீது வழக்கு பதிய மறுத்த இன்ஸ்பெக்டருக்கு ரூ25 ஆயிரம் அபராதம்

3/18/2020 3:24:17 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்; அதிர்ச்சியளிக்கும் ரயில்வே அறிக்கை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: வீரியம் அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை தளர்த்தியது ஏன்?

சென்னை: போலி டாக்டர் தம்பதி மீது வழக்கு பதிவு செய்ய மறுத்த இன்ஸ்பெக்டருக்கு ரூ25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்தவர் மதியழகன். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், பேராவூரணியில் போலி மருத்துவர்களாக செயல்படும் தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேராவூரணி இன்ஸ்பெக்டரிடம் கடந்த  2018ம் ஆண்டு புகார் அளித்தேன். ஆனால், அவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மாநில மனித உரிமை ஆணையத்தின்   நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரரால் போலி மருத்துவர்கள் என புகாரில் கூறப்பட்ட தம்பதி மாற்று மருத்துவம் படித்து மருத்துவ சிகிச்சை அளிக்க உரிய அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஏற்பட்ட விரோதம் காரணமாக மனுதாரர் அந்த தம்பதி மீது புகார் அளித்துள்ளார்.
எனவே லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் கூறுவது தவறானது என்று இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்துள்ளார். அதே வேளையில் போலீஸ் சூப்பிரண்டு அறிக்கையில், கிளினிக்கை மூடியதாகவும், போலி டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி உள்ளார்.
எனவே போலீஸ் சூப்பிரண்டு அறிக்கையை பார்க்கும்போது, இன்ஸ்பெக்டர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதும், ஆணையத்தில் சில விஷயங்களை மறைத்ததும் தெரியவந்துள்ளது.

எனவே, இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனனுக்கு ரூ25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூலித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு உதை: காதலனிடம் போலீஸ் விசாரணை



  • குடிபோதை கண்ணை மறைத்தது 15 வயது மகளிடம் அத்துமீறல்: கொடூர தந்தை கைது



  • போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது



  • கும்மிடிப்பூண்டி அருகே காப்புக்காட்டில் அதிர்ச்சி; யு டியூப் வீடியோ மூலம் காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன் கைது: மருத்துவமனையில் ஆண் குழந்தை இறந்தது



  • மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்: ஆசிரியர் தப்பியோட்டம்



  • ‘வேலைக்கு ஏற்பாடு செய்ததற்கு கிடைத்த கைமாறு’பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் நெல்லூரில் மீட்பு: உ.பி. வாலிபர் கைது; ஆவடியில் பரபரப்பு



  • கஞ்சா விற்ற வாலிபர் கைது



  • கொரோனா பீதியில் தமிழகம் திரும்ப முடியாமல் 1000 மாணவர்கள் பிலிப்பைன்சில் தவிப்பு: உணவு, குடிநீரின்றி அவதி



  • தற்கொலை செய்வதை செல்பி எடுத்து கணவனுக்கு அனுப்பிய காதல் மனைவி



  • கல்யாண மன்னன் அதிரடி கைது: 3வது திருமணத்தின் போது ‘லபக்’



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]