இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

566 பேர் பாதிப்பு, 138 பேர் பலி எதிரொலி: மலேசியாவில் அவசரகால கட்டுப்பாடு அறிவிப்பு

3/17/2020 3:08:30 PM
உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் மலேசியாவில் இன்றைய நிலையில் 566 ேபர் பாதிக்கப்பட்டும், 138 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் உட்பட முக்கிய நகரங்கள் முடங்கி உள்ளன. இந்நிலையில், மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின், அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியில் நேற்றிரவு வெளியிட்ட அவசரகால அறிவிப்பில் கூறியதாவது: மலேசியாவில் நாளை (மார்ச் 18) முதல் இம்மாதம் 31ம் தேதி வரை தேசிய அளவில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொறுமையாக இருந்து சவாலைச் சமாளிக்க வேண்டும். மக்கள் பதற்றப்பட வேண்டாம். சமயம், சமூகம், கலாசாரம் தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

வழிபாட்டுத் தலங்களும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்படும். பேரங்காடிகள், சந்தைகள், சிறிய சந்தைகள், பல்பொருள் அங்காடிக் கடைகள் இயங்கும். வெளிநாடுகளுக்கு செல்ல மலேசியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடுகளிலிருந்து மலேசியாவுக்குத் திரும்புவோர், சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுவதுடன் அவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவர். வெளிநாட்டினர் மலேசியாவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்படும். நீர், மின்சாரம், ஆற்றல், தொலைத்தொடர்பு, அஞ்சல் சேவைகள், போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஒலிபரப்பு, நிதி, வங்கி, சுகாதாரம், மருத்துவம், தீயணைப்பு, சிறைகள், துறைமுகம், பாதுகாப்பு, தற்காப்பு, துப்புரவு, உணவு வழங்கல் உட்பட இன்றியமையாச் சேவைகள் தவிர மற்ற அரசாங்க, தனியார் வளாகங்கள் மூடப்படும்.

மேலும் சில
  • இஸ்ரேல், அமெரிக்கா, சவுதி தலைவர்கள் ரகசிய சந்திப்புக்கு இடையே ஈரான் அணுகுண்டு விஞ்ஞானி சுட்டுக் கொலை; மேற்கு ஆசியாவில் போர் மேக அச்சம்



  • 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது



  • உலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை?..அமெரிக்காவில் ஒரே நாளில் 1.56 லட்சம் பேர் பாதிப்பு



  • அமெரிக்க அதிபர், துணை அதிபராக வெற்றிப் பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு தலைவர்கள் வாழ்த்து: அடுத்தாண்டு ஜனவரி மாதம் பதவியேற்பு விழா



  • 5 மாகாண முடிவு தாமதம், டிரம்ப்பின் நீதிமன்ற வழக்கால் சிக்கல் புதிய அமெரிக்க அதிபர் நவ. 12ல் அறிவிப்பு?



  • மெஜாரிட்டிக்கு இன்னும் 6 எலக்டோரல் வாக்குகள் தேவை: அமெரிக்க அதிபராகிறார் ஜோ பிடன்



  • அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் இழுபறிக்கு இடையே ஜோ பிடன் முந்துகிறார்: டிரம்ப்பும் அதிக இடங்களை கைப்பற்றினார்



  • முன்கூட்டியே 9 கோடி பேர் வாக்களித்த நிலையில் அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல்: மகுடம் சூடப்போவது டிரம்பா? ஜோ பிடனா?



  • நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள்; துருக்கி, கிரேக்கத்தில் ‘மினி’ சுனாமி பேரலை: இடிபாடுகளில் சிக்கி 23 பேர் பலி; மீட்புப் பணி தீவிரம்



  • விமானி அபிநந்தன் விடுவிப்பு குறித்த விவாத கூட்டத்தில் பாக். ராணுவ தளபதியின் கால்கள் நடுங்கின... வியர்த்து கொட்டியது! சம்பவம் நடந்து ஓராண்டுக்கு பின் திடீர் அரசியல் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]