இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

2/28/2020 2:31:09 PM
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் மரணம் மார்ச் 1ம் தேதி முதல் பத்திர எழுத்தர்கள் ஆவண தயாரிப்புக்கு கட்டண ரசீது கட்டாயம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு அபிஷேகம், 2.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது. காலை 4 மணிக்கு கொடிபட்டம் பல்லக்கில் வைத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து 4.30 மணிக்கு கோயிலில் உள்ள கொடிமரத்திற்கு வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து 5.20 மணிக்கு வீரபாகுபட்டர் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பலவகையான அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து 6.25 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 4.30 மணிக்கு தங்கச்சப்பரத்தில் அப்பர் சுவாமிகள் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்து கோயில் சேர்தல், இரவு 7 மணிக்கு ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப்பல்லாக்கில் கோயிலிருந்து புறப்பட்டு 9 சந்திகளிலும் உலா வந்து திருக்கோயில் சேர்தல், முக்கிய திருவிழாவான வரும் 5ம் தேதி (7ம் நாள்) அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருக்கோயிலில் சண்முகப்பெருமான் உருகு சட்டசேவையும் காலை 8.30 மணிக்கு சுவாமி சண்முக விலாசத்திலிருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படி சேருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது., மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்புசாத்தியில் எழுந்தருளுகின்றார். 8ம் திருவிழாவன்று (6ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்திலும், பகல் 12 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். 10ம் திருவிழா (8ம் தேதி) காலையில் தேரோட்டம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு முதலில் விநாயகர், சுவாமி, அம்மாள் தேர்கள் இழுக்கப்படுகின்றன. 9ம் தேதி இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 10ம் தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்மன் மலர்கேடய சப்பரத்தில் எழுந்தளுகிறார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் சில
  • குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் மரணம்



  • மார்ச் 1ம் தேதி முதல் பத்திர எழுத்தர்கள் ஆவண தயாரிப்புக்கு கட்டண ரசீது கட்டாயம்



  • ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் டிரான்ஸ்பர் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி



  • ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?



  • காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை



  • காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு



  • ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது



  • பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்



  • சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பாதை: விரைவில் பணிகள் தொடக்கம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]