இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

வார்னர், பின்ச் அதிரடியில் ஆஸ்திரேலியா வெற்றி: டி20 தொடரை கைப்பற்றியது

2/27/2020 3:46:24 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

கேப்டவுன்: ஓபனர்கள் வார்னர் மற்றும் பின்ச்சின் அதிரடியால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியை வென்று, தொடரையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்தன. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி கேப்டவுனில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. ஆனால் தென்னாப்பிரிக்க பவுலர்களால், ஆஸ்திரேலிய ஓபனர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச்சின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இருவரும் இணைந்து முதல் 11.3 ஓவர்களில் 120 ரன்களை குவித்தனர். வார்னர் 37 பந்துகளில் 57 ரன்களை (5 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்தார்.

பின்ச் 37 பந்துகளில் 55 ரன்கள் (6 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். மிடில் ஆர்டரில் இறங்கிய ஸ்டீவன் ஸ்மித், ஆட்டமிழக்காமல் தன் பங்கிற்கு 15 பந்துகளில் 30 ரன்களை குவித்தார். இதையடுத்து 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்தது. வெற்றிக்கு தேவை 194 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை துவக்கிய தென்னாப்பிரிக்க அணி, முதல் ஓவரிலேயே ஆட்டம் கண்டது. அந்த அணியின் கேப்டன் குவின்டன் டி காக், 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார். ஸ்டார்க்கின் அடுத்த ஓவரில் டூ பிளெசிசும் (6 ரன்கள்) அவுட். வான் டேர் டுசேனும், ஹென்ரிக் கிளாசனும் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்தனர்.

டுசேன் 24 ரன்களிலும், கிளாசன் 22 ரன்களிலும் ஆட்டமிழந்த பின்னர், அடுத்து வந்த அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 15.3 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி. பவுலர்களில் ஸ்டார்க் மற்றும் அகார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 97 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஆஸி. பவுலர் ஸ்டார்க்கும், தொடர் நாயகனாக ஆரோன் பின்ச்சும் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29ம் தேதி பார்ல் நகரில் நடைபெற உள்ளது.

மேலும் சில
  • அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 10 விக்கெட்டையும் சாய்த்த காஷ்வீ: சண்டிகர் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு



  • இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ‘டார்ச்சர்’ அதிகம்: மனதை திறந்த இன்சமாம்-உல்-ஹக்கிம்



  • துப்பாக்கி சுடுதல், வில்வித்தைக்கு அனுமதி: சண்டிகரில் 2022ல் காமன்வெல்த்...இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய ரைபிள் சங்கம் வரவேற்பு



  • கோபே பிரையன்ட், மகள் கியானா நினைவு நாள் அனுசரிப்பு: அவளது புன்னகை சூரிய ஒளியைபோல் இருந்தது...20 நிமிட உரையில் வனேஷா பிரையன்ட் உருக்கம்



  • கால்பந்து வரலாற்றில் புதிய உலக சாதனை: 1,000 கோல் கண்ட அபூர்வ சூறாவளி....பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி அபாரம்



  • வேண்டுமென்றே ஆட்டம் தாமதம்: வெஸ்ட் இண்டீசுக்கு அபராதம்....ஐசிசி நிர்வாகம் அதிரடி



  • 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து: டெஸ்ட் சாம்பியன் இந்தியாவுக்கு முதல் தோல்வி.....பிப். 29ம் தேதி க்ரை சர்ச்சில் 2வது போட்டி



  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 5வது பதக்கம்



  • நாளை நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் சாதிக்குமா கோஹ்லி தலைமையிலான அணி?



  • நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம் கோஹ்லிதான் எனது முதல் இலக்கு: களத்துக்கு வரும் நியூசி. பவுலர் பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]