இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது

2/27/2020 3:30:05 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

ஊட்டி: ஊட்டியை சேர்ந்த சூசன் டேனியல் என்ற பெண் எழுத்தாளருக்கு 2019ன் சிறந்த மொழி பெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மைசூரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் சூசன் டேனியல். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு தனது கணவனின் ஊரான ஊட்டியில் குடியேறினார். இதன்பிறகு இலக்கிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். தேவனூர் மகாதேவா என்ற எழுத்தாளர் கன்னடத்தில் இயற்றிய ‘குசும பாலே’ என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தமைக்காக சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். இதுகுறித்து சூசன் கூறியதாவது: ஒரு படைப்பிற்கு கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகரமான சாகித்ய அகாடமி விருது எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பொருத்தவரை பெண்களே முதல் தலித்துக்கள். வீடு முதல் பணியிடம் வரை எல்லா இடங்களிலும், எல்லா மட்டத்திலும் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது.

எனக்கு தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் தமிழை செவி வழி கேட்டே கற்றுக் கொண்டேன். பள்ளி முதல் கல்லூரி வரை கன்னடத்தில் படித்தேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு சிறிய நாவலை வாசிக்க துவங்கினேன். 110 பக்கத்தை மட்டுமே கொண்டிருந்த அந்த நாவல் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘குசும பாலே’ என்ற தலைப்பைக் கொண்ட அந்த நாவல் தலித் இளஞனை மைய கதாபாத்திரமாக கொண்டது. அவனின் காதல் முதல் அவன் கொலைசெய்யப்பட்டப்பின் தவிக்கும் அவனின் காதலியின் தவிப்புவரை அத்தனையும் கண்முன் நிறுத்தியிருந்தார் எழுத்தாளர் தேவனூர் மகாதேவா. இந்த நாவலை மொழி பெயர்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணம் இருந்தது. இந்த நாவலை பொது வெளிக்கு கொண்டு செல்ல ஆங்கிலம் மட்டுமே ஒரு வழியாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவலாசிரியரிடம் அனுமதி கேட்க அவரும் சம்மதித்தார். அதனை தொடர்ந்து அந்த நாவலை ஆங்கிலத்தில் ெமாழி பெயர்த்தேன். அதற்கு 2019ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.இவ்வாறு கூறினார்.

மேலும் சில
  • ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?



  • காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை



  • காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு



  • பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்



  • சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பாதை: விரைவில் பணிகள் தொடக்கம்



  • சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்



  • பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது



  • திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்



  • ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்துக்கு கமல்-ஷங்கர் பொறுப்பேற்க வேண்டும்: ஹீரோ எழுதிய கடிதத்துக்கு பட நிறுவனம் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]