இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

2/27/2020 3:26:18 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? பியர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்டு ரஜினியின் காட்டுப்பகுதி சாகசம் மார்ச் 23ம்தேதி ஒளிப்பரப்பு: டிஸ்கவரி சேனல் உறுதி செய்தது

சென்னை: சிஏஏ, என்பிஆர் நடைமுறைப்படுத்தக்கூடாது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றகோரி   தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு  போராட்டம் நடைபெறும் என்று குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் நேற்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிஏஏ மற்றும் என்பிஆர் சட்டத்தை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பாலபிரஜாபதி அடிகளார், காஜா மொய்தீன் பாகவி, பேராயர் தேவசகாயம் ஆகியோர் உரையாற்றினர்.

இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், காங்கிரஸ் தலைவர் கோபண்ணா, சிபிஎம் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், கிறிஸ்துவ மக்கள் முன்னணி தலைவர் இனிகோ இருதயராஜ், கல்வியாளர் தாவூத் மியாகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். என்பிஆரின் நீட்சியான என்ஆர்சியை ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனும் கொள்கை முடிவையும் எடுக்க வேண்டும்.

சிஏஏவுக்கு எதிராக டில்லி ஷாஹின்பாக் போன்று வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை அவர்களோடு மக்கள் மேடை உறுதுணையாக இருக்கும். டெல்லியில் வன்முறை, அராஜகத்தில் இறங்கியுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு சிஏஏ-வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், என்பிஆரை மாநில அரசு அமுல்படுத்தக் கூடாது.

இதையும் மீறி அரசு செயல்படுத்தினால் விவரங்களை தராமல் மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த வேண்டும். சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-யை எதிர்த்து மார்ச் மாதம் 3வது வாரத்தில் 24 மணி நேர தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். காலை 10 மணிக்கு துவங்கும் அந்தப் போராட்டம் மறுநாள் காலை 10 மணிக்கு முடியும். சென்னையில் தலைமை செயலகம் முன்பும், இதர ஊர்களில் மத்திய அல்லது மாநில அரசு அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் சில
  • ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?



  • காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை



  • காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு



  • ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது



  • பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்



  • சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பாதை: விரைவில் பணிகள் தொடக்கம்



  • பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது



  • திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்



  • ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்துக்கு கமல்-ஷங்கர் பொறுப்பேற்க வேண்டும்: ஹீரோ எழுதிய கடிதத்துக்கு பட நிறுவனம் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]