‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்துக்கு கமல்-ஷங்கர் பொறுப்பேற்க வேண்டும்: ஹீரோ எழுதிய கடிதத்துக்கு பட நிறுவனம் பதில்
2/27/2020 3:22:56 PM
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்துக்கு படநிறுவனத் துடன் கமல்ஹாசனும், ஷங்கரும் ெபாறுப்பேற்க ேவண்டும் என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. கடந்த வாரம் இதன் படப்பிடிப்பு சென்னை அடுத்துள்ள தனியார் திரைப்பட ஸ்டுடியோவில் இரவு படப்பிடிப்பு நடந்தது. அப்போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கமல், ஷங்கர், காஜல் அகர்வால் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர் பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
விபத்து தொடர்பாக கமல்ஹாசன் பட தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்,’இனி திரைப்படம் தயாரிக்கும்போது ஹீரோமுதல் கடைநிலை ஊழியர்வரை பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும்’ என கூறியிருந்தார். கமலின் கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘உங்களின் கடிதத்திற்கு முன்பாகவே விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டோம். இந்தியன் 2 படப்பிடிப்பின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் லைகா நிறுவனம் எந்த குறையும் வைக்கவில்லை. படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும் (கமல்ஸ்ஹாசன்), இயக்குநர் ஷங்கருக்கும் பொறுப்பு இருக்கிறது. உங்கள் கட்டுப்பாட்டில்தான் முழுப்படப் பிடிப்பும் இருந்தது என்பதை நாங்கள் நினைவூட்டுகிறோம்’ எனக் கூறி உள்ளது.