இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கண்களை கட்டியும் கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் இஸ்லாமியர்கள் கோஷம்: டெல்டாவில் பதற்றம்

2/27/2020 3:21:05 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

திருச்சி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முத்துப்பேட்டையில் கண்களை கட்டியும் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு கோஷமிட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சக்கராபள்ளியில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று 8வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பங்கேற்ற ஆண்கள், பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தஞ்சை கீழவாசல் ஆட்டு மந்தையில் 12வது நாளாக இன்று இஸ்லாமியர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்ெதரு திடலில் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இன்று 13வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றிரவு போராட்டத்தில் கலந்துக்கொண்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரும் ஒரே நேரத்தில் கண்ணில் கருப்புதுணி கட்டி நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கூத்தாநல்லூர் காவல் நிலையம் அருகே அனைத்து ஜமாத்தார் சார்பில் 13வது நாளாக இன்று போராட்டம் நடந்து வருகிறது. புதுக்கோட்டை கலீப் நகர் 4ம் வீதியில் காத்திருப்பு போராட்டம் முதல்நாளாக நேற்று மாலை தொடங்கியது. உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தொடங்கியுள்ள இப்போராட்டத்தில் பெண்களும் தனிப் பகுதியில் அமர்ந்துள்ளனர். சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறும் வரையில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். கறம்பக்குடி புளியன்சோலை பகுதி மதரசா பள்ளிவாசல் 9வது நாளாகவும், மணமேல்குடி அருகே அம்மாபட்டினத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சில
  • ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?



  • காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை



  • காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு



  • ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது



  • பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்



  • சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பாதை: விரைவில் பணிகள் தொடக்கம்



  • சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்



  • பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது



  • திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]