இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவொற்றியூரில் திமுக எம்எல்ஏ கேபிபி.சாமி மரணம்: மு.க.ஸ்டாலின் அஞ்சலி

2/27/2020 3:20:13 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

சென்னை: திருவொற்றியூர் திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கேபிபி.சாமி உடல்நலக் குறைவால் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருவொற்றியூர், எம்எல்ஏவாக இருப்பவர் கேபிபி.சாமி (58). கேவிகே குப்பத்தில் வசித்து வருகிறார். திமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமாகி, இன்று காலை 6.10 மணியளவில் கேவிகே.குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். கேபிபி.சாமி, திமுகவின் மூத்த உறுப்பினரும் முன்னாள் கவுன்சிலருமான பரசுராமன் என்பவரின் மகன் ஆவார். இவர், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர்.

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு மீன்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்து வந்தார். மேலும், அவருக்கு திமுக மாநில மீனவரணி அமைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. மறைந்த கேபிபி.சாமியின் மனைவி உமா. மூத்த மகன் இனியவன். இளைய மகன் பரசு பிரபாகரன். ஒரு மகள் உள்ளார். முன்னாள் கவுன்சிலரான உமா, மூத்த மகன் இனியவன் ஆகிய இருவரும் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டனர். அவரது மகள் திருமணமாகி, தனது கணவரோடு ஆஸ்திரேலியாவில் குடியிருந்து வருகிறார். கேபிபி சாமிக்கு கே.பி.சங்கர், கே.பி.இளங்கோ, கே.பி.சொக்கலிங்கம் என 3 சகோதரர்களும், 2 சகோதரிகளும் உள்ளனர்.

இதில் முன்னாள் கவுன்சிலரான கே.பி.சங்கர், திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளராகவும், முன்னாள் கவுன்சிலரான கே.பி.சொக்கலிங்கம் வட்ட செயலாளராகவும் உள்ளனர். இவரது குடும்பத்தினர் திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளனர். மீனவர் பகுதியில் திமுகவை வளர்க்க கே.பி.பி.சாமி முக்கிய பங்காற்றியவர். மறைந்த கலைஞர் கருணாநிதியிடம் மிக நெருக்கமாக  இருந்தவர். கேபிபி.சாமியின் உடல், திருவொற்றியூர் கேவிகே.குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திமுக மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கேபிபி.சாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, ஆவடி நாசர், பகுதி செயலாளர்கள் தி.மு.தனியரசு, மருதுகணேஷ் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மூத்த நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மாலை 3 மணிக்கு பட்டினத்தார் கோயில் தெரு அருகே உள்ள மயானத்தில் மறைந்த கேபிபி.சாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது என அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

மேலும் சில
  • ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?



  • காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை



  • காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு



  • ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது



  • பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்



  • சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பாதை: விரைவில் பணிகள் தொடக்கம்



  • சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்



  • பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது



  • திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]