இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தொழிலதிபர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்: ஆரணியில் பரபரப்பு

2/27/2020 3:19:13 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

ஆரணி: ஆரணியில் தொழிலதிபர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ஐடி சோதனையில் மூட்டை, மூட்டையாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோயில் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், அவரது தம்பி சிவக்குமார் மற்றும் சொக்கலிங்கம், அவரது சகோதரர் ராமலிங்கம் ஆகியோர் பட்டுச்சேலை உற்பத்தி செய்யும் நிறுவனம் வைத்தள்ளனர். இவர்கள் முறையாக கணக்கு காட்டாமல், குறைவான வரியை செலுத்தியதாகவும், பணம் மற்றும் சொத்துக்களை ஏராளமாக குவித்துள்ளதாகவும் வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், சென்னை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் குழுவினர், சென்னை இணை ஆணையாளர் சுப்பாராவ் தலைமையில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி முதல் நேற்று இரவு வரை 4 பேர்களின் வீடு, கடைகள் மற்றும் திருமண மண்டபங்கள் என 16 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை செய்தனர்.

இதுபோல் ஆரணி அருணாகிரிசத்திரம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த தர்மலிங்கம், இவரது மகன்கள் சண்முகம், ரமேஷ், இளையராஜா, நித்தி, பாக்யராஜ் ஆகியோருக்கு சொந்தமான திருமண மண்டபம், சில்க்ஸ், பட்டு சேலை தயாரிப்பு நிறுவனம் மற்றும் கடைகளில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் கணக்கில் வராத ஆணவங்கள், லட்சக்கணக்கில் பணம் ஆகியவற்றை மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்து 3 கார்களில் நேற்றிரவு சென்னைக்கு எடுத்து சென்றனர். இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். வருமான வரி சோதனையை தொடர்ந்து, அப்பகுதியில் பட்டு சேலை உரிமையாளர்கள் கடைகளை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். ஆரணியில் வருமான வரித்துறையினர் சோதனையில் மூட்டை மூட்டையாக ஆவணங்கள், பணம் பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?



  • காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை



  • காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு



  • ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது



  • பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்



  • சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பாதை: விரைவில் பணிகள் தொடக்கம்



  • சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்



  • பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது



  • திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]