இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

லைக் கொடுத்ததால் வந்த சோதனை பேஸ்புக்கில் மாணவி போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்: அரக்கோணம் வாலிபர் கைது

2/27/2020 3:17:38 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

காளஹஸ்தி: பேஸ்புக் மூலம் பழகிய ஐஐடி மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல் விடுத்த அரக்கோணம் வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி அடுத்த ஏர்ப்பேடு மண்டலத்தை சேர்ந்தவர் ஐஐடி மாணவி. இவர் தனது சகோதரியின் பெயரில் பேஸ்புக் பயன்படுத்தி வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சோனிபங்காரம் என்ற பெயரில் மாணவிக்கு பிரண்ட் ரிக்வஸ்ட் வந்தது. இதையடுத்து மாணவி, சோனிபங்காரத்துடன் பேஸ்புக்கில் சாட் செய்து வந்தார். அடிக்கடி இவ்வாறு சாட் செய்து நண்பர்களாகினர். இவ்வாறு நட்பாக பழகிய சில நாட்களுக்கு பிறகு மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய சோனிபங்காரம் மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து கேட்டபோது அவர்,  தன்னுடன் தொடர்ந்து சாட் செய்யவில்லை என்றால், இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுபற்றி மாணவி,  கடந்தாண்டு ஆகஸ்ட் 30ம் தேதி ஏர்ப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகசியமாக மர்ம நபரை கண்காணித்து வந்தனர். இதில் தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சிந்தலநிகில் மனோகர் என்பவர்தான், சோனிபங்காரம் என்ற பெயரில் மாணவியை மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று ஏர்ப்பேடு-வெங்கடகிரி சாலையில் சென்ற சிந்தல நிகில் மனோகரை கைது செய்தனர். அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • கொரோனா வைரஸ் காரணமாக சொகுசுக் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டஇந்தியர்கள் 119 பேர் நாடு திரும்பினர்



  • பியர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்டு ரஜினியின் காட்டுப்பகுதி சாகசம் மார்ச் 23ம்தேதி ஒளிப்பரப்பு: டிஸ்கவரி சேனல் உறுதி செய்தது



  • காங்கேயம் பகுதியில் பூஞ்சானம் பிடித்து கெட்டுப்போன ஆவின் கலப்பு தீவனம் விற்பனை: மாடுகளுக்கு நோய் தாக்கும் ஆபத்து



  • மத்திய அமைச்சர், பாஜ தலைவர்கள் மீது வழக்குப்பதிய உத்தரவிட்ட நீதிபதி திடீர் இடமாற்றம்: டெல்லி பார் கவுன்சில் கண்டனம்



  • தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் பாஜ கூட்டணியில் முதல் எதிர்ப்பு தீர்மானம்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி



  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஆதரவு போராட்டத்தில் மோதல்: டெல்லி கலவர பலி 20 ஆக அதிகரிப்பு...மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை



  • டெல்லி வன்முறை இன்றும் 2ம் நாளாக தொடர்கிறது வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..பள்ளிகளுக்கு விடுமுறை



  • 17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகள் காலி: தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு தேர்தல்...தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியீடு



  • ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு: டிரம்ப்-மோடி முக்கிய பேச்சு...டெல்லியில் காந்தி சமாதியில் மலர்தூவி அஞ்சலி



  • 2 நாள் பயணமாக அகமதாபாத் வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு: 22 கி.மீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]