இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

யானை மறுவாழ்வு முகாமிற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

2/27/2020 3:14:18 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

மதுரை: திருச்சியில் யானை மறுவாழ்வு முகாமிக்கு தடைவிதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி புதிய மாஹி சாலக்கராவைச் சேர்ந்த தீபக் நம்பியார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமிற்கு சட்டப்படி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் மத்திய மிருக காட்சி சாலை ஆணையரகத்தின் அனுமதி பெறப்படவில்லை. வனத்துறைக்கு சொந்தமான இடத்தை வனத்துறை அல்லாத இதர வகையில் பயன்படுத்துவதற்கான உரிய அனுமதியும் பெறவில்லை. வனத்துறை நிலத்தில் பலவித பயன்பாட்டிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. வனத்துறைக்காக ஒதுக்கப்படும் நிதி, இதற்காக செலவிடப்படுகிறது.

இதனால், வனத்துறை சார்ந்த பணிகளுக்கு செலவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அனுமதி ெபறாத முகாமில் எப்படி யானைகள் பாதுகாப்புடன் இருக்க முடியும். எனவே, உரிய அனுமதியின்றி சட்டவிரோத யானைகள் மறுவாழ்வு முகாம் செயல்படத் தடை விதிக்க வேண்டும். இந்த முகாமிற்காக மத்திய, மாநில அரசுகளின் நிதியை ஒதுக்கத் தடை விதிக்க வேண்டும். அங்குள்ள யானைகளின் நலன் கருதி அவற்றை உரிய நபர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இம் மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ராமு ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், முதன்மை தலைமை வன பாதுகாவலர், எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாம் அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

மேலும் சில
  • ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா?



  • காஞ்சிபுரம் சரவண பவன் உணவக மேலாளர் தற்கொலை: சம்பள பிரச்னையா? விசாரணை



  • காசோலை மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக சம்மன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு



  • ஊட்டி பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது



  • பொள்ளாச்சி அருகே கூட்டுறவு வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுன் தப்பியது: ஜன்னல் கம்பியை வளைத்து புகுந்தனர்



  • சத்தியமங்கலம் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு



  • மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினாவில் பாதை: விரைவில் பணிகள் தொடக்கம்



  • சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்



  • பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்ட செயல்பாடு தமிழகம் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது: 2017ஐ விட 6 இடங்கள் பின்தங்கியது



  • திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]