இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் பாஜ கூட்டணியில் முதல் எதிர்ப்பு தீர்மானம்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி

2/26/2020 4:35:52 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

பாட்னா: பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு, என்ஆர்சி-யை அம்மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் எனக்கூறி, முதன்முறையாக எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகின்றது. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். பீகார் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும்நிலையில், நேற்றைய அமர்வில் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு  (என்ஆர்சி) அமல்படுத்தப் போவதில்லை என்று அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில்,‘‘குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம். இச்சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா அல்லது இல்லையா என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறது. ஆனால், என்ஆர்சி-யைப் பொறுத்தவரை இப்போதுள்ள வடிவத்தில் அதை பீகாரில் நடைமுறைப்படுத்த மாட்டோம். என்பிஆர் 2010ல் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்றே நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து, துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி பேசுகையில், “முதல்வர் நிதிஷ் குமார் என்பிஆர் 2010 முறையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அதில் எந்தவிதமான கேள்விக்கும் இடமில்லை’’ என்றார். பீகார் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுவரை தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் இவ்வாறு தீர்மானம் இயற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். வருகிற நவம்பருக்கு முன்னதாக அம்மாநிலத்தில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் தலைமையிலான அரசு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • கொரோனா வைரஸ் காரணமாக சொகுசுக் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டஇந்தியர்கள் 119 பேர் நாடு திரும்பினர்



  • பியர் கிரில்ஸுடன் மேன் வெர்சஸ் வைல்டு ரஜினியின் காட்டுப்பகுதி சாகசம் மார்ச் 23ம்தேதி ஒளிப்பரப்பு: டிஸ்கவரி சேனல் உறுதி செய்தது



  • காங்கேயம் பகுதியில் பூஞ்சானம் பிடித்து கெட்டுப்போன ஆவின் கலப்பு தீவனம் விற்பனை: மாடுகளுக்கு நோய் தாக்கும் ஆபத்து



  • லைக் கொடுத்ததால் வந்த சோதனை பேஸ்புக்கில் மாணவி போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டல்: அரக்கோணம் வாலிபர் கைது



  • மத்திய அமைச்சர், பாஜ தலைவர்கள் மீது வழக்குப்பதிய உத்தரவிட்ட நீதிபதி திடீர் இடமாற்றம்: டெல்லி பார் கவுன்சில் கண்டனம்



  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஆதரவு போராட்டத்தில் மோதல்: டெல்லி கலவர பலி 20 ஆக அதிகரிப்பு...மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை



  • டெல்லி வன்முறை இன்றும் 2ம் நாளாக தொடர்கிறது வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு..பள்ளிகளுக்கு விடுமுறை



  • 17 மாநிலங்களில் 55 எம்பி பதவிகள் காலி: தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு தேர்தல்...தலைமை தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியீடு



  • ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு: டிரம்ப்-மோடி முக்கிய பேச்சு...டெல்லியில் காந்தி சமாதியில் மலர்தூவி அஞ்சலி



  • 2 நாள் பயணமாக அகமதாபாத் வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு: 22 கி.மீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]