இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக 10 விக்கெட்டையும் சாய்த்த காஷ்வீ: சண்டிகர் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு

2/26/2020 3:48:05 PM
ரூ.61 லட்சம் மதிப்புள்ள 504 தங்க காசுகள் கண்டெடுப்பு: திருவானைக்காவல் கோயிலில் மேலும் தங்க புதையல் உள்ளதா? சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற கோரி தலைமை செயலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

கடப்பா: 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சண்டிகர் - அருணாச்சல பிரதேச அணிக்கும் இடையே 50 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆந்திராவின் கடப்பாவில் நடைபெற்றது. சண்டிகர் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் பந்து வீச்சாளர் காஷ்வீ கவுதம் (16) என்பவர் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளை தனி ஒருவராக வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். முதலில் விளையாடிய சண்டிகர் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. காஷ்வீ கவுதம் 68 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இதற்கடுத்து பந்துவீசிய சண்டிகர் அணியின் கேப்டன் காஷ்வீ கவுதம் 4.5 ஓவர்கள் வீசி 12 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில், ஹாட்ரிக் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் அருணாச்சலப் பிரதேச அணி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் காஷ்வீ கவுதம் இதற்கு முன்பு பீகார் அணியுடனான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.
 
சண்டிகர் அணி அடுத்ததாக புதுச்சேரி அணியுடன் மோதுகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் அணில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்தார். தற்போது, சண்டிகரைச் சேர்ந்த 16 வயதான நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் காஷ்வீ கவுதம் பிசிசிஐ-யின் உள்நாட்டு போட்டியில் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார் என்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளது.

மேலும் சில
  • வார்னர், பின்ச் அதிரடியில் ஆஸ்திரேலியா வெற்றி: டி20 தொடரை கைப்பற்றியது



  • இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கொடுத்த ‘டார்ச்சர்’ அதிகம்: மனதை திறந்த இன்சமாம்-உல்-ஹக்கிம்



  • துப்பாக்கி சுடுதல், வில்வித்தைக்கு அனுமதி: சண்டிகரில் 2022ல் காமன்வெல்த்...இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய ரைபிள் சங்கம் வரவேற்பு



  • கோபே பிரையன்ட், மகள் கியானா நினைவு நாள் அனுசரிப்பு: அவளது புன்னகை சூரிய ஒளியைபோல் இருந்தது...20 நிமிட உரையில் வனேஷா பிரையன்ட் உருக்கம்



  • கால்பந்து வரலாற்றில் புதிய உலக சாதனை: 1,000 கோல் கண்ட அபூர்வ சூறாவளி....பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி அபாரம்



  • வேண்டுமென்றே ஆட்டம் தாமதம்: வெஸ்ட் இண்டீசுக்கு அபராதம்....ஐசிசி நிர்வாகம் அதிரடி



  • 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து: டெஸ்ட் சாம்பியன் இந்தியாவுக்கு முதல் தோல்வி.....பிப். 29ம் தேதி க்ரை சர்ச்சில் 2வது போட்டி



  • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 5வது பதக்கம்



  • நாளை நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் சாதிக்குமா கோஹ்லி தலைமையிலான அணி?



  • நாளை மறுநாள் முதல் டெஸ்ட் தொடக்கம் கோஹ்லிதான் எனது முதல் இலக்கு: களத்துக்கு வரும் நியூசி. பவுலர் பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]