இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டதால் பணம் கட்டி செல்லும் வாகனங்களுக்கு ஒருமுறை செல்வதற்கு மட்டுமே அனுமதி

2/13/2020 5:21:08 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

வேலூர்: டோல்கேட்டில் பாஸ்டேக் அமல் எதிரொலி தொடர்ந்து பணம் கட்டி செல்லும் வாகனங்களுக்கு சிங்கிள் என்டரி மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 522 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள்  உள்ளன. இவற்றை சராசரியாக நாளொன்றுக்கு 1 கோடியே 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. அனைத்து வகையான கார்கள், சரக்கு வாகனங்கள் மற்றும்  பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசல், காலதாமதத்தால் ஊழியர்களுடன் ஏற்படும் வாக்குவாதங்கள், கைகலப்புகள், வன்முறை சம்பவங்களை  தவிர்க்கும் வகையில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ரொக்கமாகபணம் வசூலிக்கும் முறை கைவிடப்படுகிறது. அதற்குப் பதிலாக பாஸ்டேக் எனப்படும்  மின்னணு முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தும் திட்டம் கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இது ஜனவரி 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அரசு மற்றும்  தனியார் வங்கிகள், பே டிஎம் போன்ற இணையதளங்கள் வழியாக பாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்கிக் கொள்ளலாம்.

பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் டோல்கேட்டில்  செல்லும்போது, சிங்கின் எண்டரி மட்டுமே பணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் திரும்பி வருவதற்கு சேர்த்து பில் கேட்டால், டோல்கேட்டில் பணியாற்றும்  ஊழியர்கள் பணம் கட்டி செல்லும் வாகனங்களுக்கு சிங்கிள் என்டரி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதனால் பாஸ்டேக் இல்லாத வாகனங்களில்  செல்பவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘பாஸ்டேக் முறை எதிரொலியாக தற்போது டோல்கேட்டில் சிங்கிள் என்டரிக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.  பள்ளிகொண்டா டோல்கேட்டில் ஒருமுறை கடக்க கார்களுக்கு ₹85 வசூலிக்கப்படுகிறது.

ஆனால் முன்பு குறிப்பிட்ட நேரத்தில் சென்று திரும்பும் கார்களுக்கு ரூ.130  கட்டணமாக வசூலித்து வந்தனர். தற்போது சிங்கிள் என்டரி மட்டுமே என்பதால் ஒரு வாகனத்துக்கு ₹40 முதல் ₹100 வரை கூடுதலாக செலவு ஏற்படுகிறது.  மீண்டும் பழைய முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றனர். டோல்கேட் ஊழியர்கள் கூறுகையில், ‘பாஸ்டேக் முறையை முழுவதுமாக செயல்படுத்தும் வகையில் பணம் கட்டி செல்லும் வாகனங்களுக்கு சிங்கிள் என்டரி  மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பாஸ்டேக் உள்ள வாகனங்களுக்கு டபுள் என்டரி தொடர்ந்து வழங்கப்படுகிறது’ என்றனர்.

மேலும் சில
  • சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு



  • சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது



  • 11 பேர் வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு; ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பிடிவாதம்: ஆதரவாளர்களுடன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை



  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]