இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ரஜினியுடன் கூட்டணி விவகாரம்: ராமதாஸ் திடீர் அந்தர் பல்டி

2/13/2020 5:09:35 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

சென்னை: ரஜினி கட்சி தொடங்கினால் யோசிக்கலாம் என்று கூறிய ஒரே நாளில் பாமக, அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது என்று கூறி ராமதாஸ் மீண்டும் அந்தர்  பல்டி அடித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழக அரசியலில் வரும் சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் ரஜினி கட்சி தொடங்குவாரா என்ற கேள்விக்கு நீண்ட  காலமாக விடை கிடைக்காமல் உள்ளது. அவர் கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் அவரது அரசியல்  ஆலோசகராக இருக்கக்கூடிய தமிழருவி மணியன், வரும் ஏப்ரல் மாதம் ரஜினி கட்சி தொடங்கி பிரமாண்ட மாநாடு நடத்துவார் என்று கூறி தமிழக அரசியலில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 அதோடு அவர் விடவில்லை. ரஜினி தொடங்கும் கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு தமிழக அரசியல் களத்தில்  மீண்டும் சூட்டைக் கிளப்பியது. தமிழருவி மணியனின் பேச்சு குறித்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இதுகுறித்த  கேள்விகளுக்கு சென்னையில் ராமதாஸ் பதில் அளித்தார்.   அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பின்னர் இதுகுறித்து கேட்டால் பதிலளிக்கிறேன் என்றார். தமிழருவி மணியன் கருத்து சொல்ல அவருக்கு  உரிமை இருக்கிறது. இவ்வளவு காலம் ரஜினியை கடுமையாக விமர்சித்துள்ளீர்கள், அவர் கட்சி தொடங்கினால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவீர்களா  என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்.

அதன்பின்னர் அதுகுறித்து யோசிக்கலாம்’ என்றார்.  அதிமுக கூட்டணியில் இருக்கும் ராமதாஸ், நேரடியாக பதில் சொல்லாமல், மழுப்பலான பதிலை கூறியதும், கட்சி தொடங்கினால் யோசிக்கலாம் என்றும்  கூறியதும் தமிழக அரசியல் அரங்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விவாதங்கள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அனல் பறக்கும்  நிலையில், ‘ரஜினி பற்றிய கேள்விக்கு என்னிடம் இடமில்லை. அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் மட்டுமல்ல, அதற்கு பின்பும்  தொடரும்’ என்று கூறி ராமதாஸ் அந்தர் பல்டி அடித்துள்ளார். ரஜினி கட்சி தொடங்கினால் யோசிக்கலாம் என்று கூறிய ஒரே நாளில், அதிமுக கூட்டணியில் பாமக தொடரும் என்று அவர் கூறியுள்ளது அதிமுக கூட்டணி  கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு



  • சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது



  • 11 பேர் வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு; ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பிடிவாதம்: ஆதரவாளர்களுடன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை



  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]