இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக் கொலை; மனைவிக்கும் சரமாரி வெட்டு: தம்பி மனைவி வெறிச்செயல்

2/13/2020 3:55:28 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

ஆம்பூர்: வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த விவசாயியை வெட்டிக்கொலை செய்ததுடன் அவரது மனைவியை சரமாரி வெட்டிய தம்பி மனைவி கைது  செய்யப்பட்டார்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன் (50), வெங்கடேசன் (45). இதில் முருகேசன், அவரது மனைவி  விஜயா ஆகியோர் அதே பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடுகட்டி வசிக்கின்றனர். வெங்கடேசன், அவரது மனைவி சித்ரா (40) ஆகியோர்  கம்மகிருஷ்ணபள்ளியில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில், ஒன்றரை ஆண்டுக்கு முன் வெங்கடேசன் இறந்துவிட்டதால் சித்ராவுக்கும் முருகேசன் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக  முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு சித்ராவின் மகனும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

 இதனால் வேதனை  அடைந்த சித்ரா, ‘முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் சூனியம் வைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர்கள் வைத்த  சூனியத்தால்தான் எனது மகன் இறந்துவிட்டான்’ எனக்கூறி அடிக்கடி முருகேசன் குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். நேற்றிரவு முருகேசன் மற்றும் விஜயா இருவரும் தங்களது வீட்டின் முன்பகுதியில் உள்ள தாழ்வாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில்  சித்ரா, முருகேசன் வீட்டிற்கு சென்று முருகேசனை சரமாரியாக வெட்டியதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு திடுக்கிட்டு  எழுந்த விஜயாவையும் கத்தியால் சரமாரி வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால் சித்ரா அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

முருகேசன் சடலமாக கிடப்பதையும், விஜயா உயிருக்கு போராடி கொண்டிருப்பதையும் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் உமராபாத் போலீசார் சென்று விஜயாவை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து வேலூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முருகேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ராவை தேடி வந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த சித்ராவை கைது செய்து அவரிடம் இருந்து கத்தியை  பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]