இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

2 சிறுமிகளுக்கு பாலியல் டார்ச்சர் பெரிசு மீது பாய்ந்தது குண்டாஸ்

2/13/2020 3:54:35 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

கோவில்பட்டி: கோவில்பட்டியில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு புதுக்கிராமம் நாராயணகுரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(63). இவர் அப்பகுதியில் கடந்த மாதம் 16ம் தேதி  தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து  பரமேஸ்வரனை கைது செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி. அருண் பாலகோபாலன் பரிந்துரையின்படி, பரமேஸ்வரனை குண்டர்  சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை கோவில்பட்டி டிஎஸ்பி  ஜெபராஜ் மேற்பார்வையில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி பாளை மத்திய சிறையில் வழங்கினார். இதையடுத்து குண்டர்சட்டத்தில்  பரமேஸ்வரன் அடைக்கப்பட்டார்.

சிறுமியை பலாத்காரம்: வாலிபருக்கு போக்சோ

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கலாதரன் (39). இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் திருப்பூர் வந்த கலாதரன்  பூலுவப்பட்டி பகுதியில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்தார். குடும்ப பிரச்னை காரணமாக கலாதரனின் மனைவி குழந்தையுடன் கேரளாவுக்கு  சென்றார்.

இந்தநிலையில் வீட்டுக்கு அருகே வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவருடன் கலாதரனுக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி,  சிறுமியை வெளியூர் கடத்தி சென்றுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருப்பூர் அனைத்து மகளிர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தியதில்,  சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தில் கலாதரன் கைது செய்யப்பட்டார்.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]