இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சர்வதேச சிறந்த ஹாக்கி பயிற்சியாளர்கள் கொலின், அலிசனுக்கு விருது : எப்ஐஹெச் அறிவிப்பு

2/13/2020 3:48:10 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

புதுடெல்லி: டச்சு மகளிர் தேசிய ஹாக்கி அணியின் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட அலிசன் அன்னன், 2019ம் ஆண்டின் எப்ஐஹெச்  மகளிர் பயிற்சியாளர் விருதை வென்றார். இவர், மூன்றாவது முறையாக இவ்விருதை பெறுகிறார். நெதர்லாந்து பெண்களுக்கான தலைமை பயிற்சியாளராக  இருந்த போது, 2017  மற்றும் 2018ம் ஆண்டுகளில் விருதுகளை வென்றுள்ளார். தற்போது, 2019ம் ஆண்டுக்கான விருதையும் பெற்றுள்ளார்.  இதுகுறித்து, அலிசன் அன்னன் கூறியதாவது:
எங்கள் அனைவருக்கும் 2019ம் ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக இருந்தது. நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்.

கடந்தாண்டு 10வது முறையாக யூரோஹாக்கி  நேஷன்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்று 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றோம். பயிற்சியாளர் பரிசை வென்றது ஒரு அருமையான மரியாதை.  அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 2019ம் ஆண்டில் புரோ லீக் போட்டி, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற பல சவால், ஐரோப்பிய சாம்பியன்ஷிப்  ஆகியவற்றை எதிர்கொண்டோம். இந்தாண்டு எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு போன்ற பல பெரிய போட்டிகள் வரிசையாக  இருப்பதால் அணிக்கு சவால்கள் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
 
அதேபோல் ஆண்கள் பிரிவில், ஆஸ்திரேலிய தேசிய ஹாக்கி அணி பயிற்சியாளர் கொலின் பேட்ச், 2019ம் ஆண்டின் எப்ஐஹெச் ஆண் பயிற்சியாளராக தேர்வு  செய்யப்பட்டுள்ளார். இவர், டிசம்பர் 2016ல் ஆஸ்திரேலியா தேசிய ஆண்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முன்னதாக 2004  ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தையும், 2002 மற்றும் 2006 உலகக் கோப்பைகளில் வெள்ளியையும் வென்ற ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக  பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அப்பாடா....எனக்கு கொரோனா இல்லை: கேன் ரிச்சர்ட்சன் மகிழ்ச்சி



  • விளையாட்டு உலகை முடக்கியது கொரோனா: பிரெஞ்ச் ஓபன் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு



  • ஸ்டெம்புகளுக்கு பின்னால்.... தோனி அணியின் மிகப்பெரிய சொத்து: வாசிம் ஜாபர் பேட்டி



  • கிரிக்கெட் விளையாட்டை காட்டிலும் வாழ்க்கையில நிறைய விஷயம் இருக்கு..! பாகிஸ்தானில் இருந்து ஆஸி. வீரர் ஓட்டம்



  • இத்தாலி முழுவதும் மூடப்பட்ட நிலையில் சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை



  • இந்தியாவில் கங்குலியை பாருங்க என்னமா உசரத்துக்கு வந்துட்டார்..! பாக். வாரியத்தை வறுத்தெடுக்கும் அக்தர்



  • கொரோனா தொற்றை தவிர்க்க கைகளை கழுவுவது எப்படி?.... சச்சின் வெளியிட்ட வீடியோ வைரல்



  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டு தள்ளிபோனது ‘கோபா’, ‘யூரோ’



  • ஒலிம்பிக்கை ஓராண்டுக்கு ஒத்திவையுங்க..! அமெரிக்க அதிபர் வேண்டுகோள்



  • கொரோனா பீதி: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அடுத்தடுத்து ரத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]