இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கெஜ்ரிவால் 16ம் தேதி முதல்வராக பதவியேற்பு 7 அமைச்சர்களுக்கும் அதே இலாகா...விருந்தினர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

2/13/2020 2:54:04 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

புதுடெல்லி: டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் 16ம் தேதி பதவியேற்கிறார். ஏற்கனவே பதவியில் இருந்த 7 அமைச்சர்களுக்கும் அதே இலாகா ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்படும் விருந்தினர் பட்டியல் தயாரிப்பு தீவிரமாக நடக்கிறது. டெல்லி சட்டபேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வென்றது. ஆம் ஆத்மி சார்பில் களமிறக்கப்பட்ட 9 பெண்களில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் அதிஷி (38). இவர் கல்வித் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஆலோசகராக இருந்தபோது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

அதுபோல் எம்எல்ஏ ராகவ் சத்தாவும் நிதித் துறை ஆலோசகராக இருந்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு இவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள் என்பதால், மேற்கண்ட இருவருக்கும் இந்த அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  கடந்த முறை இருந்த 7 அமைச்சர்களும் நிச்சயம் இந்த முறை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே இடம்பெறுவர் என்றும் கூறப்படுகிறது. காரணம், இவர்கள் அனைவரும் இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளனர். வரும் 16ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறை முதல்வராக பதவியேற்கிறார். இந்த அமைச்சரவை அப்படியே இந்த முறையும் தொடர்ந்தால் புதிய அரசில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சர்கள் மணீஷ் சோடியா, சதேந்திரா ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், ராஜேந்திர பால் கவுதம் ஆகியோர் இடம்பெறுவர். இவர்களது துறைகள் பின்னர் அறிவிக்க வாய்ப்புள்ளது.

துணை முதல்வராக இருந்த மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா, தொடர்ந்து அதே பதவியில் இருப்பார் என்று ஆம்ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்விழாவில் பங்கேற்க ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான மணீஷ் சிசோடியா கூறுைகயில், ‘‘டெல்லியில் உள்ள ஒவ்வொருவரும் வந்து கெஜ்ரிவாலை ஆசீர்வதிக்க அழைக்கப்படுகிறார்கள்” என்றார். கடந்த இரண்டு தடவைகளை விட இம்முறை பதவியேற்பு விழா பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கு அழைக்கப்படும் விருந்தினர்களின் பட்டியலை கட்சி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை



  • 28 ஆண்டுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை: வலுவான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிப்பு



  • சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?



  • கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்று 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு?... சினிமா தியேட்டர், மண்டபங்கள் திறக்க வாய்ப்பு



  • உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்



  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]