இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தங்க புதையலை கண்டுபிடிக்கும் தங்க புதையலை கண்டுபிடிக்கும்: காஞ்சி.யை சேர்ந்தவர் உள்பட 8 பேர் கைது

2/12/2025 4:40:24 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

சித்தூர்: தங்க புதையலை கண்டுபிடிக்கும் அட்சயபாத்திரம் என்று கூறி வாலிபரிடம் ₹2.10 கோடி மோசடி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார். இவரிடம் கர்நாடகாவை சேர்ந்த கங்காதர் உள்பட 9 பேர் கும்பல், தங்களிடம் அட்சயபாத்திரம் இருப்பதாகவும் இது பூமிக்கு அடியில் இருக்கும் தங்க புதையல்களை  கண்டுபிடித்து விடும் என கூறியுள்ளனர். இதை நம்பிய நவீன்குமார் சித்தூர் அடுத்த குடிபல்லி மண்டலத்துக்கு சென்றபோது அங்கு அவரிடம் அட்சய பாத்திரம் என்று கூறி ஒரு பாக்சை கொடுத்துவிட்டு அந்த கும்பல் ரூ.2 கோடியே 10 லட்சத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த அட்சய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தங்க புதையல் இருக்கும் இடத்தை தேடி உள்ளார்.

 ஆனால் அவ்வாறு எதுவும் தெரியவில்லை. அந்த பாக்சை திறந்து பார்த்தபோது பேட்டரியால் இயங்கும் மின்விளக்குகளை பொருத்தி ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து நவீன்குமார் குடிபல்லி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடிபல்லி ரயில் நிலையம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது 2 கார்கள் மற்றும் பைக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்தவுடன் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்று 8 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அட்சய பாத்திரம் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரியவந்தது. அவர்கள் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டையைச் சேர்ந்த மகாதேவா(42), சிக்பல்லாபூர் பகுதியை சேர்ந்த கங்காதர்(30),

கிருஷ்ணகிரி மாவட்டம் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரா(40), கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை அடுத்த காமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார்(19), சித்தூர் மாவட்டம் கொத்தபல்லி கிராமத்தை சேர்ந்த சீனப்பா(35), பெங்களூரு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தனசேகர்(35), காஞ்சிபுரம் மாவட்டம், ராஜகுளம் கிராமத்தை சேர்ந்த விநாயகம்(35), கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபல்லியை சேர்ந்த சேகர்(28) என்பது தெரியவந்தது. மகாதேவாவிடமிருந்து ரூ.8 லட்சத்து 95 ஆயிரம், கங்காதரிடமிருந்து ரூ.10 லட்சம், ராமச்சந்திராவிடமிருந்து ரூ.50 ஆயிரம், சிவகுமாரிடமிருந்து  ரூ.10 லட்சம், பூமிக்கு அடியில் பதுக்கி வைத்த பணம் உட்பட ரூ.1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். ரூ.18 லட்சம் மதிப்புள்ள ஒரு கார், ரூ.2 லட்சம் மதிப்புள்ள மற்றொரு கார், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்களிடம் விசாரணை செய்ததில் மற்றொரு நபரும் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இவர் வேலூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. எனவே, 3 தனிப்படை அமைத்து போலீசார் வேலூர் பகுதியில் தலைமறைவாக இருப்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



  • ‘ஸ்பெஷல் கிளாஸ்’ என அழைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது



  • காரில் கடத்தி வரப்பட்ட 1.47 கோடி ரொக்கம், 25 லட்சம்: அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: 4 பேர் கைது



  • பைக் திருடர்கள் மூவர் கைது: 2 பைக் பறிமுதல்



  • அதிமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் மேலும் 2பேர் கைது



  • அருவியில் உடை மாற்றிய பெண்களிடம் சில்மிஷம் செய்த 2 ராணுவ வீரர்கள் அதிரடி கைது



  • காங்கிரஸ் பிரமுகர் கொலை 4 பேருக்கு போலீஸ் வலை



  • நிதி மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]