இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு நாடகம்; 2 பெண்கள் கைது: பணம், நகை வாங்கி ஏமாற்றியது அம்பலம்

2/12/2025 4:24:20 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

களக்காடு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, கடனாக வாங்கிய நகை, பணத்தை கொடுக்காமல் இருப்பதற்காக இந்த நாடகம் நடத்தியது அம்பலத்துக்கு வந்துள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மேலரதவீதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணவேணி (25), பாமா மீனா (26). இவர்களது கணவன்களான முருகனும், புகழ்சேட்டும் சகோதரர்கள். கடந்த மாதம் 27ம் தேதி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது அங்குவந்த கிருஷ்ணவேணி, பாமாமீனா ஆகியோர் மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து மீட்டனர்.

 பின்னர் அவர்கள், கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் அளித்த புகாரில் ‘சிதம்பரபுரத்தை சேர்ந்த 4 பேரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியதாகவும் பணத்தை திருப்பி செலுத்திய பின் அவர்கள் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றும் கூறியிருந்தனர்.
இதனிடையே சேதுராயபுரத்தை சேர்ந்த வசந்தா (80) என்பவர் களக்காடு போலீசில் கொடுத்த புகாரில், ‘’எனது மகன் வெளிநாட்டில் வசித்து வருவதால் மருமகள் கனகாவுடன் நான் வசித்து வருகிறேன். கிருஷ்ணவேணி, பாமாமீனா ஆகியோர் எனது உறவினர்கள். கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் வந்து பணம் தந்து உதவும்படிகேட்டபோது மறுத்து விட்டேன்.

 மீண்டும் 2 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணவேணி, அவரது கணவர் முருகன், பாமாமீனா, அவரது கணவர் புகழ்சேட் ஆகியோர் வந்து பணம் கேட்டனர். அப்போதுஎன்னிடம் பணம் இல்லாததால் எனது 15 பவுன் தங்கசெயின், 5 பவுன் எடைகொண்ட தங்க நெக்லஸ், 7 பவுன் எடை கொண்ட வளையல் ஆகியவற்றை கொடுத்தேன். இந்த நகைகளை 5 மாதத்தில் திருப்பித் தருவதாக கூறிய அவர்கள், பின்னர் நகைகளை திருப்பித் தரவில்லை.  இதுபற்றி கேட்டதற்கு அனைவரும் என்னை அவதூறாக பேசி, தாக்க வந்தனர். நகைகளை கேட்டால் வெட்டிக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினர். கந்துவட்டி கொடுமை என பொய் புகார் கொடுப்போம் என்று மிரட்டினர்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுபோல் அதே ஊரைச் சேர்ந்த ஜானகியிடம் 21.50 பவுன் தங்க நகைகளையும், யசோதா என்பவரிடம் ரூ 3.50 லட்சத்தையும் பெற்றுக் கொண்டு திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து களக்காடு போலீசார் விசாரித்து கிருஷ்ணவேணி, முருகன், பாமாமீனா, புகழ்சேட் மற்றும் முருகனின் தாய் மயில் ஆகியோர் மீதும் மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேணி, பாமாமீனா ஆகியோரை கைது செய்தனர். முருகன், புகழ்சேட், மயில் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



  • ‘ஸ்பெஷல் கிளாஸ்’ என அழைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது



  • காரில் கடத்தி வரப்பட்ட 1.47 கோடி ரொக்கம், 25 லட்சம்: அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: 4 பேர் கைது



  • பைக் திருடர்கள் மூவர் கைது: 2 பைக் பறிமுதல்



  • அதிமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் மேலும் 2பேர் கைது



  • அருவியில் உடை மாற்றிய பெண்களிடம் சில்மிஷம் செய்த 2 ராணுவ வீரர்கள் அதிரடி கைது



  • காங்கிரஸ் பிரமுகர் கொலை 4 பேருக்கு போலீஸ் வலை



  • நிதி மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]