இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி: பாகிஸ்தானுக்கு சென்றது ‘டுபாக்கூர்’ வீரர்களா?...அதிர்ச்சியில் விளையாட்டு அமைச்சகம், ஐஓஏ, ஏகேஎப்ஐ

2/11/2025 3:59:40 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானின் லாகூரில் இருக்கும் பஞ்சாப் கால்பந்து மைதானத்தில் உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முதல் தொடங்கியது.  முன்னதாக இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக இந்திய கபடி வீரர்கள் லாகூர் சென்றுள்ளனர். லாகூர் விடுதியில் தங்கியிருக்கும் இந்திய வீரர்களுக்கு,  அவ்விடுதி உரிமையாளர்கள் மாலை அணிவித்து வரவேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இப்போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்க விளையாட்டுத்துறை அமைச்சகமோ, நேசனல் பெடரேஷனோ அனுமதி அளிக்கவில்லை. இதுதொடர்பாக மத்திய  விளையாட்டு துறை அமைச்சகம் கூறுகையில், ‘வெளிநாடுகளில் விளையாடச் செல்லும் வீரர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும்,  விளையாட்டுத்துறை அமைச்சகமும் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் இந்த வீரர்கள் யார் என்றும் தெரியவில்லை. அவர்களுக்கு இந்திய அமைச்சகம் ஏதும்  அனுமதி அளிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் நரிந்தர் பாத்ரா கூறுைகயில், “இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் அரசும் இந்த விஷயத்தை  ஆராயும் என்று நினைக்கிறேன். தற்போது விளையாட சென்றவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன? இது எங்கள் அணி அல்ல; இந்திய அரசின் சார்பில்   மேல் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் யார், அவர்கள் ஏன் பாகிஸ்தானுக்குச் சென்றார்கள் என்பது குறித்து அவர்கள் விசாரிப்பார்–்கள். இதன் பின்னணி  என்ன என்பதும் விசாரிக்கும். அவர்கள் எந்தவொரு சர்வதேச நிகழ்விலும் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுடனான எங்கள் உறவு அனைவருக்கும் தெரியும்.  பொதுவாக விசாவிற்கு விண்ணப்பித்தால், அதைப் பெற இரண்டு மாதங்கள் ஆகும். இந்த 60 பேருக்கும் இவ்வளவு விரைவாக விசா கிடைத்தது விந்தையாக  உள்ளது.  

இதுகுறித்து, மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிண் ரிஜ்ஜு கூறுைகயில், ‘‘பாகிஸ்தானில் நடைபெறும் உலக கபடி  சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க எந்த இந்திய வீரருக்கும் அனுமதி வழங்கவில்லை. விசா வழங்குவது ஒரு நாட்டின் இறையாண்மைக்குரியது. விசா வழங்குவதில்  எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. நாட்டின் பெயரில் விளையாடுவது அல்லது இந்திய கொடியை பயன்படுத்தியது குறித்து விசாரிக்கப்படும்’’ என்றார்.

இதுகுறித்து, அமெச்சூர் கபடி  சங்கத்தின் நிர்வாகியும் (ஏ.கே.எப்.ஐ),  ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி எஸ்.பி.கார்க் கூறுகையில், ‘ஏகேஎப்ஐ  பாகிஸ்தானில்  விளையாட எந்த அணிக்கும் அனுமதி வழங்கவில்லை. பாகிஸ்தானிற்கு  விளையாட சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.  2010  முதல் 2019ம் ஆண்டு வரை 6 முறை உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டியை  இந்தியா நடத்தியுள்ளது. 6 போட்டியிலும் இந்தியா வெற்றி  பெற்றுள்ளது. இதில்  2010, 2012, 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் இறுதி போட்டியில் பாகிஸ்தானை  தோற்கடித்து இந்தியா வெற்றியை கைப்பற்றியது  குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்



  • இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்



  • கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து



  • சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்



  • ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி



  • ஐபிஎல் கிரிக்கெட் 3வது லீக்; சன்ரைசர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்: விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்



  • கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் இன்றிரவு ஐபிஎல் கோலாகல தொடக்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதல்



  • யு.எஸ்.ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்: ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ்



  • பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு கொரோனா பாசிட்டிவ்



  • ஐசிசி உலக கோப்பை, ஐசிசி டி20, ஐசிசி ஆசிய கோப்பை தொடர் சாதனை மன்னன் தோனி ஓய்வு; சென்னையில் இருந்து அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]