இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு: ஊத்துக்கோட்டையில் மேலும் ஒரு விஏஓ கைது...திருநெல்வேலியை சேர்ந்தவர்

2/11/2025 3:47:51 PM
ரயில், பஸ் மீது கல்வீசி தாக்குதல் அன்புமணி மீது நடவடிக்கை?: சென்னை ஐகோர்ட்டில் திடீர் முறையீடு டெல்லி எல்லைகளில் 7ம் நாளாக தொடர் போராட்டம்; வேளாண் சட்ட ஆட்சேபனைகள் இன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு...விவசாய சங்கங்களுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில், ஊத்துக்கோட்டை அருகே மேலும் ஒரு விஏஓ கைது செய்யப்பட்டுள்ளார். அவர், திருநெல்வேலி மாவட்டத்தை  சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்களில்  முதல் 100 இடங்களை பிடித்தனர்.  இதுகுறித்து புகார் எழுந்ததும், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முறைகேடாக தேர்வு  எழுதியது உறுதி செய்யப்பட்டது. தீவிர விசாரணையில் மூளையாக செயல்பட்டது சிவகங்கையை சேர்ந்த எஸ்ஐ சித்தாண்டி, புரோக்கர் ஜெயக்குமார்,  டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சித்தாண்டி, அவரது தம்பி மற்றும் ஊழியர் ஓம் காந்தன் கைது செய்யப்பட்டனர்.  புரோக்கர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிபிசிஐடி போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில், டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள் விஜயகுமார், மல்லிகா தலைமையில் தனிப்படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டு வருகின்றனர். ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குரூப் 4 தேர்வில் விடைத்தாள்களில் அழியும் மையால் தேர்வு எழுதி விட்டு,  விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியிலேயே வாகனத்தை நிறுத்தி, விடைகளை மட்டும் எழுதி மீண்டும் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்ததாக  தெரிவித்தனர். இதேபோலத்தான், குரூப் 2 தேர்விலும் நடத்தியதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, விடைத்தாள்களை ஏற்றி செல்லும் பணியில் ஈடுபட்ட சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (39),  செந்தில்குமார் (36), பெரம்பூர் ஜி.கே.எம்.காலனியை சேர்ந்த மெக்கானிக் மற்றும் டிரைவராக உள்ள சாபுதீன் (42) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றிய ஓம் காந்தனும், ஜெயக்குமாரும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள்  இனோவா காரில் விடைத்தாள்களை ஏற்றி செல்வோம். எங்கள் காருக்கு முன்னால் ஓம் காந்தனின் சைலோ கார் செல்லும். வழியில் அதிகாரிகள்  சோதனையிடுகிறார்களா? போலீசார் வாகன சோதனை செய்கிறார்களா என்பதை முன்னால் சென்று ஓம் காந்தன் சொல்வார். வழியில் ஓம் காந்தன்  உத்தரவின்படித்தான், கார்களை நிறுத்தி, விடைத்தாள்களை மாற்ற உதவி செய்வோம் என்று தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஓம் காந்தன், கார்த்திக்  ஆகியோரிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 2016ல் நடைபெற்ற விஏஓ தேர்வில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மையத்தில் தேர்வு எழுதியவர்களின் முறைகேடு குறித்த புகாரின்பேரில்  சிபிசிஐடி போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்தவரும் தற்போது  திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில் படலையார் குளம் விஏஓவாக பணியாற்றும் பன்னீர்செல்வம் (29), சென்னை அரும்பாக்கத்தைச்  சேர்ந்தவரும், தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா பனையஞ்சேரி விஏஓ செந்தில்ராஜ் (எ) கபிலன் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புரோக்கர் ஜெயக்குமாரிடம் ₹7 லட்சம் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இருவரும் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயபதி கிராமத்தை சேர்ந்தவரும், தற்போது  ஊத்துக்கோட்டை தாலுகா அட்டங்கிகாவனூரில் விஏஓ.வாக பணியாற்றி வருபவருமான சுயம்புராஜன் (32) என்பவரை இன்று காலை சிபிசிஐடி சிறப்பு எஸ்ஐ  சேவியர் தலைமையில் போலீசார், இன்று காலை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். சுயம்புராஜன், கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்வில்  வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை குரூப்2ஏ தேர்வு விவகாரத்தில் சிக்கிய 19 பேர், குரூப் 4 தேர்வில் சிக்கிய 16 பேர் என மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும்  6 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விஏஓ தேர்வில் முறைகேடு செய்ததாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சில
  • ரயில், பஸ் மீது கல்வீசி தாக்குதல் அன்புமணி மீது நடவடிக்கை?: சென்னை ஐகோர்ட்டில் திடீர் முறையீடு



  • பாம்பனுக்கு 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு இலங்கையில் கரை கடக்கும்: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்



  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



  • தமிழகத்தில் ஊரடங்கு டிச.31வரை நீட்டிப்பு; கல்லூரிகள் டிசம்பர் 7ல் திறப்பு: 14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி



  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]