இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ஒரே நாளில் 108 பேர் பலி; இதுவரை 1,016 பேர் மரணம்: கொரோனா தீப்பொறி பெரிய நெருப்பாக மாறவாய்ப்பு...உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை

2/11/2025 2:44:46 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

பிஜீங்: சீனாவில் நேற்று ஒரே நாளில் 108 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியான நிலையில், இதுவரை 1,016 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா  வைரஸ் தீப்பொறி பெரிய நெருப்பாக மாறவாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் தவிக்கும் 80 இந்தியரை  மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிர்பலி நாளுக்குநாள் அதிகரித்து வரும்நிலையில், உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சீனாவுக்கு  வெளியே கொரோனா பரவுவதை எச்சரித்து ‘ஒரு பெரிய நெருப்பாக மாறும் தீப்பொறி’ ஆக கொரோனா இருக்கலாம் என்றும், மனித இனத்தை தொற்றுநோய்  கட்டுக்குள் கொண்டு வந்துவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது. உலகளவில் 24 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 319 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவிற்கு வெளியே, இதுவரை ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒரு மரணம் வீதம் இரண்டு மரணங்கள் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ளது.  ஜப்பானிய துறைமுகமான யோகோகாமாவில் 3,700 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் டயமண்ட் இளவரசி கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், 65  கொரோனா பாதிப்பு நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்கு சொந்தமான (சிசிஎல்என்) கப்பலில் உள்ள பயணிகளில் 135 பேர்  கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள், தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி ேநர புள்ளிவிவரப்படி சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனா தாக்குதலில் 2,478 புதிய உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.  

இது முந்தைய நாளில் 3,062 ஆக இருந்தது. மொத்தம் 42,638 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும், பலி எண்ணிக்கை 1,016 ஆக  உயர்ந்துள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 108 பேர் ஒரே நாளில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்  முந்தைய நாளோடு ஒப்பிடும்போது புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜெனீவாவில் கூறுகையில், ‘‘சீன மக்கள் அல்லாத மக்களிடமிருந்து  கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்திய கூறுகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா வைரசானது, ஒரு பெரிய நெருப்பாக மாறக்கூடிய தீப்பொறியாக இருக்கலாம்.  

கொரோனா குறித்து விசாரிக்க சர்வதேச சுகாதார அமைப்பு நிபுணர்கள் முன்கூட்டியே சீனா விரைந்துள்ளனர். 2002 - 2003ல் நடந்த ‘சார்ஸ்’ இறப்பை  காட்டிலும், கொரோனா இறப்பு அதிகமாகிக் கொண்டு வருகிறது. உலகளவில் 168 ஆய்வகங்கள் வைரசைக் கண்டறிய சரியான தொழில்நுட்பத்தைக்  கொண்டுள்ளன. இருந்தும் இந்த நிறுவனங்கள் தாங்கள் உருவாக்கிய நோயறிதல் சோதனைகளை சரிபார்க்க தேவையான மருத்துவ வைரஸ் மாதிரிகளைக்  கண்டுபிடிக்க சிரமப்பட்டு வருகின்றன’’ என்றார்.  சர்வதேச அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசால், சீனாவின் ெபாருளாதாரம் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது.  வைரஸ் பரவுவதை  தடுக்க வசதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான ஹூபேயில், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டு சாலைகள்  வெறிச்சோடி கிடக்கின்றன.

கிட்டத்திட்ட 60 மில்லியன் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அடிப்படை தேவைகள் புறநகரங்களில் இருந்து  பாதுகாப்பு வசதிகளுடன் வாகனங்களில் அனுப்பப்பட்டு வருகிறது.  இந்தியாவை பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும், சீனாவில் இந்தியர்கள் பலர் மீட்கப்படாமல் உள்ளனர். இதுகுறித்து,  சீனாவின் இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி கூறுைகயில், ‘‘சுமார் 80 இந்தியர்கள் இன்னும் ஹூபேயில் இருக்கிறார்கள். இவர்கள், மின்னஞ்சல், சமூக ஊடகங்கள்  மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு, தங்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூதரகம் இதுவரை 28,000 மின்னஞ்சல்களைப்  பெற்றுள்ளது. வுஹான் மற்றும் ஹூபே மாகாணத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களிடமிருந்து ஒரு நாளைக்கு சுமார் 100 அழைப்புகள் வருகின்றன.  அவர்களுக்கு முறையான உதவிகளை வழங்குவதற்காக சீன அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். அவர்களை அங்கிருந்து  வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து, தூதரகம் அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருகிறது’’ என்றார்.

மேலும் சில
  • ஐ.நா-வில் பாக். பிரதமர் பேசும்போது இந்திய பிரதிநிதி வெளிநடப்பு: பிரதமர் மோடி இன்று மாலை உரை



  • உக்ரைனில் தரையிறங்கிய போது சோகம் விமான விபத்தில் 25 பேர் பலி



  • இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி; மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: 2000 பேர் பரிசோதனைக்கு ஒப்புதல்



  • தற்போது ஆராய்ச்சிகளில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை



  • அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’: புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை



  • இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



  • மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து



  • ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு



  • மாஸ்கோவில் இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை



  • சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]