இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த பிப். 24, 25ல் டிரம்ப் இந்தியா வருகை: வெள்ளை மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு

2/11/2025 2:42:54 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தும்விதமாக வருகிற 24, 25ம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா செல்ல உள்ளதாக, வெள்ளை மாளிகை  அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட  கூட்டம் ஒன்றில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் சேர்ந்து பங்கேற்றார். அப்போது, டிரம்ப் தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வருமாறு மோடி  அழைப்பு விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்தாண்டு இறுதியில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்க அரசின் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு,  டிரம்பை சந்தித்து அவரை இந்தியா வருமாறு மீண்டும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இன்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி  மெலானியா டிரம்ப்  ஆகியோர் பிப். 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியாவுக்கு சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். அமெரிக்க  அதிபரின் இந்த  பயணம், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை மென்மேலும்  பலப்படுத்தும். இருநாட்டு மக்களுக்கிடையே இருக்கும் வலுவான மற்றும்  நீடித்த  பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அமையும்’ என்று அந்த ட்விட்டர்  பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜன. 16ம்  தேதியன்று, அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து இருநாட்டு  அதிகாரிகளுக்கிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை  நடைபெற்று வருவதாக இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதையடுத்து, தற்போது டிரம்ப் இந்தியா வருவது உறுதி  செய்யப்பட்டுள்ளதாக, இந்திய வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் 45வது அதிபராக 2017ம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு  டிரம்ப், தனது பதவியேற்புக்கு பின்னர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. இந்தியா வரும் டிரம்ப், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்கிறார். முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக்  ஒபாமா 2010 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ஐ.நா-வில் பாக். பிரதமர் பேசும்போது இந்திய பிரதிநிதி வெளிநடப்பு: பிரதமர் மோடி இன்று மாலை உரை



  • உக்ரைனில் தரையிறங்கிய போது சோகம் விமான விபத்தில் 25 பேர் பலி



  • இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி; மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: 2000 பேர் பரிசோதனைக்கு ஒப்புதல்



  • தற்போது ஆராய்ச்சிகளில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை



  • அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’: புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை



  • இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



  • மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து



  • ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு



  • மாஸ்கோவில் இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை



  • சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]