இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு

2/9/2025 2:26:12 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுத்து வருவதால் பலி எண்ணிக்கை 803 ஆக உயர்ந்தது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த வாலிபருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் திருச்சி  அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அவரது அனுமதிக்கப்பட்டுள்ளார்.சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால்  நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற  தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 723 ஆக உயர்ந்திருந்தது. இதேபோன்று 34,598 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது என சீன சுகாதார  அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் அமெரிக்காவை சேர்ந்த 60 வயது நிறைந்த பெண் ஒருவர் உகான் நகரிலுள்ள ஜின்யின்டாங் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார். இதேபோன்று உகான்  நகரில் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த 60 வயது நபர் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். இதனால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் என  முதன்முறையாக வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 81 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வடைந்து உள்ளது. கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ்  வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியாகி இருந்தனர். இந்த எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை சீன அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 3.45 லட்சம் பேருக்கு நோய்க்கான அறிகுறி இருப்பதாகவும், 1.89 லட்சம் பேர் மருத்துவ  பரிசோதனையில் இருப்பதாகவும் சீனா தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.

திருச்சி வந்த  வாலிபருக்கு கொரோனா

சீனாவைத் தவிர பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது. ஜப்பானில் 89 பேருக்கும், சிங்கப்பூரில் 33 பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது  உறுதியாகி உள்ளது. சிங்கப்பூரிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு வீடுகளில் முடங்குவதால், பல கடைகள் பொருட்களின்றி காலியாக கிடக்கின்றன. இந்தியாவில்  கேரளாவில் வைரஸ் தொற்று தாக்கி 3 பேருக்கு தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், வுகானில் இருந்து திரும்பிய 647 இந்தியர்கள் மனேசர் மருத்துவமனையில் 14 நாள்  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த திருச்சி குழுமணி மருதாண்டாக்குறிச்சியை சேர்ந்த வீரமணி மகன்  ராமமூர்த்தி (30) என்பவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ஐ.நா-வில் பாக். பிரதமர் பேசும்போது இந்திய பிரதிநிதி வெளிநடப்பு: பிரதமர் மோடி இன்று மாலை உரை



  • உக்ரைனில் தரையிறங்கிய போது சோகம் விமான விபத்தில் 25 பேர் பலி



  • இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி; மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: 2000 பேர் பரிசோதனைக்கு ஒப்புதல்



  • தற்போது ஆராய்ச்சிகளில் உள்ள எந்த கொரோனா தடுப்பூசியும் பலன்தராது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை



  • அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடிய விஷ ‘பார்சல்’: புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை



  • இது டிரெய்லர்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான்... கொரோனாவின் 2வது அலை நிச்சயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை



  • மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல்-யுஏஇ-பஹ்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் கையெழுத்து



  • ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி நாளை முதல் மக்களுக்கு விநியோகம்: உலகின் முதல் நாடாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு



  • மாஸ்கோவில் இந்திய-சீன அமைச்சர்கள் சந்திப்பு: எல்லை பதற்றத்தை குறைக்க 5 அம்ச திட்டம்: சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை



  • சீன மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் விசா ரத்து: அமெரிக்கா அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]