இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு...34 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

2/8/2025 2:28:10 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

பீஜிங்: சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் தாக்கி இதுவரை 722 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 34,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சீனாவில் கொரோனா எனப்படும் வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் சீனா முழுவதும் பரவியது. இந்நிலையில் சீனாவில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 86 பேர் பலியாகி உள்ளனர். இதன்படி  வைரஸ் தாக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. 34 ஆயிரத்து 500 பேர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர்த்து உலகம் முழுவதும் 23 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

இதற்கிடையில் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த ‘டயமண்ட் பிரின்சஸ்’ என்ற கப்பலில் இருந்த ஒருவருக்கும், வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 80 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பலில் சுமார் 2 ஆயிரத்து 500 பயணிகளும், 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். இந்த கப்பலை நாட்டிற்கு உள்ளே அனுமதிக்காமல் துறைமுகத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலேயே ஜப்பான் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த கப்பலில் மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கப்பலில் உள்ள பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் பாதிப்பு உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்த கப்பலில் 6 இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி அளிக்க தயார்: அதிபர் டிரம்ப் டுவிட்

அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது டுவிட்  பதிவில்,’சீனாவுடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி உள்ளதா என தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவுக்கு எந்தவிதமான உதவியையும் வழங்கத் தயார்’ என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் 80 இந்திய மாணவர்கள்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் இந்திய மாணவர்கள் 80 பேர் தங்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த அமைச்சர்,  80 மாணவர்களில் 10 பேர் இந்தியாவுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால், காய்ச்சல் இருந்ததால் அவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் சில
  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



  • கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது: ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை



  • ஹாங்காங் விவகாரத்தில் தலையீடு; 14 சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை: வெளியுறவுத்துறை செயலர் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]