இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்டம் கோலாகலம்

2/7/2025 2:28:36 PM
விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4ம் நாளான கடந்த 2ம் தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5.15 மணிக்கு வந்தார். 5.15 மணி முதல் 5.45 மணி வரை ரதரோஹணம்(தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகள் வழியாக வலம் வந்து, நிலையை வந்தடைந்தது. தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10ம் திருநாளான நாளை சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு நாளான 9ம் தேதி(ஞாயிற்று கிழமை) மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது.

மேலும் சில
  • விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல்



  • ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா



  • பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் ஆர்ப்பாட்டம்: அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு



  • அதிமுக தலைமை அலுவலகத்தில் 14 மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை: 4 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது



  • டிஎன்பிஎஸ்சிமுறைகேடுகளை தொடர்ந்து அடுத்த மோசடி அம்பலம்: 1000 பேருக்கு போலீஸ் வேலை நிராகரிப்பு...போலி சான்றிதழ் தந்து பணியில் சேர முயன்றது கண்டுபிடிப்பு



  • ரூ.77 கோடி சிக்கிய விவகாரம்: அன்புசெழியனின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு...பெரிய ‘தலைகள்’ சிக்குகின்றனர்?



  • புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு: சேலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அரசு உதவி செய்யும்...முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • காவிரி ஆணையத்தை தவறவிட்ட தமிழக அரசு: பெண்ணையாறு பிரச்னையை தீர்க்க புதிய நடுவர் மன்றம் கேட்கிறது...விவசாயிகள் அதிர்ச்சி



  • காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ரூ.88 கோடி முறைகேடு: போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் விஜிலன்ஸ் ரெய்டு...50க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது



  • புதிய காரணங்களைக் கண்டுபிடித்து காஷ்மீரில் தலைவர்களை சிறை வைப்பதை மோடி அரசு கைவிட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]