இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ரூ.250 கட்டணத்தில் தரிசனம் செய்பவர்களுக்கு திருச்செந்தூர் கோயிலில் இலவச லட்டு, இலை விபூதி வழங்க திட்டம்

2/6/2025 3:44:31 PM
விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா

திருச்செந்தூர்: பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா  போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா  களைகட்டும்.
எழில் கொஞ்சும் கடற்கரையுடன் கோயில் அமைந்துள்ளதால் பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா வந்தும் பொழுதை கழிப்பர். இங்கு நடைபெறும்  கந்தசஷ்டி, தைப்பூச திருவிழாக்களில் விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

நாளை மறுநாள் (8ம் தேதி) தைப்பூசத்தை  முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், நாகர்கோவில், செங்கோட்டை, வள்ளியூர், தூத்துக்குடி, ராமநாதபுரம்  உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருப்பதி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்படுவதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி  கோயிலிலும் பக்தர்களுக்கு இலவச புட்டமுது பிரசாதமாக வழங்க வேண்டும் என்று தினகரனில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக தற்போது ரூ.250 கட்டணத்தில் டிக்கெட் எடுத்து சுவாமியை தரிசனம் செய்பவர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு மற்றும் 3 இலை விபூதி  பிரசாத கவரில் வழங்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. ரூ.250 கட்டணத்தில் டிக்கெட் எடுத்து சுவாமியை தரிசனம் செய்து விட்டு வெளியே வரும்  பக்தர்களுக்கு கோயில் கொடிமரம் அருகே ஒரு லட்டு, 3 இலை விபூதி ஆகியவற்றை பிரசாத கவரில் வைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும்  தெரிகிறது.

மேலும் சில
  • விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல்



  • ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா



  • பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்தக் கோரி பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் ஆர்ப்பாட்டம்: அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு



  • அதிமுக தலைமை அலுவலகத்தில் 14 மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை: 4 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது



  • டிஎன்பிஎஸ்சிமுறைகேடுகளை தொடர்ந்து அடுத்த மோசடி அம்பலம்: 1000 பேருக்கு போலீஸ் வேலை நிராகரிப்பு...போலி சான்றிதழ் தந்து பணியில் சேர முயன்றது கண்டுபிடிப்பு



  • ரூ.77 கோடி சிக்கிய விவகாரம்: அன்புசெழியனின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு...பெரிய ‘தலைகள்’ சிக்குகின்றனர்?



  • புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு: சேலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அரசு உதவி செய்யும்...முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • காவிரி ஆணையத்தை தவறவிட்ட தமிழக அரசு: பெண்ணையாறு பிரச்னையை தீர்க்க புதிய நடுவர் மன்றம் கேட்கிறது...விவசாயிகள் அதிர்ச்சி



  • காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ரூ.88 கோடி முறைகேடு: போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் விஜிலன்ஸ் ரெய்டு...50க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது



  • புதிய காரணங்களைக் கண்டுபிடித்து காஷ்மீரில் தலைவர்களை சிறை வைப்பதை மோடி அரசு கைவிட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]